img
img

பாஸ் அறிவிப்பினால் பரிதவிக்கிறார் பக்காத்தான்
திங்கள் 03 ஜூலை 2017 13:01:10

img

ஜார்ஜ்டவுன், நாட்டின் 14-ஆவது பொதுத்தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் வேளையில், அதனை சந்திக்க பக்காத்தான் ஹராப்பான் தயாராக இருக்கிறதா என்ற கேள்வியை எழுப்பியுள்ளார் ஜ.செ.க. தலைமைச் செயலாளர் லிம் குவான் எங். தற்போதைய சூழலை பார்த்தால் எனக்கு கவலை ஏற்படுகிறது. இருந்தா லும், 2008-ஆம் ஆண்டு தேர்தலை பார்த்தால், அப்போதுகூட நாம் தயாராக இல்லை. இருந்தாலும் ஐந்து மாநிலங்களை கைப்பற்ற முடிந்தது. இந்த தடவை 2008 தேர்தல் சுனாமியை நாம் எதிர்பார்க்கவில்லை. மலேசிய சுனாமியை எதிர்பார்த்து காத்திருக்கிறோம் என்று குவான் எங் கூறினார். பொதுத்தேர்தலுக்கு இன்னும் சில மாதங்களே இருப்பதாகத் தோன்றுவதால் எதிர்க்கட்சிக் கூட்டணி இன்னும் தயாராகவில்லை போல் தோன்றுகிறது என்பது தொடர்பான கேள்விக்கு அவர் இவ்வாறான பதிலை அளித்தார். கடந்த 2008-ஆம் ஆண்டு தேர்தலில் பினாங்கு, சிலாங்கூர், பேரா, கெடா, கிளந்தான் ஆகிய மாநிலங்களில் எதிர்க்கட்சி கூட்டணி வெற்றி பெற்றது. பி.கே.ஆர்., ஜ.செ.க., பாஸ் கட்சிகளின் கூட்டணி மொத்தம் 82 நாடாளுமன்ற தொகுதிகளிலும் வெற்றி வாகை சூடி, அதே சமயம் தேசிய முன்னணிக்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை நிராகரித்தது. எனினும், மூன்று பக்காத்தான் ராக்யாட் சட்டமன்ற உறுப்பினர்கள் கட்சித் தாவியதன் விளைவாக 2009-இல் தேசிய முன்னணி மீண்டும் பேரா மாநி லத்தை கைப்பற்றியது. 2013-இல் பக்காத்தானின் பிடி மேலும் தளர்ந்தது. இந்த முறை கெடாவை அவர்கள் இழந்தனர். அதே சமயம் பேரா மாநிலம் தொடர்ந்து தேசிய முன்னணி வசம் இருந்தது. எனினும், பக்காத்தான் ராக்யாட் நாடாளுமன்றத்தின் பிரதிநிதித்துவம் 89-ஆக அதிகரித்தது. அதன் பிறகு பல்வேறு மாற்றங்களை அக்கூட்டணி சந்தித்துள்ளது. பி.கே.ஆர்., ஜ.செ.க-வுடன் இனியும் இணைந்து செயல்பட முடியாது என்று பாஸ் கட்சி அறிவித்துள்ளது. அடுத்த பொதுத்தேர்தலில் மூன்றாவது அணியாக அது செயல்படும் சாத்தியம் நிறையவே உள்ளது. இதன் அடிப்படையில், சிலாங்கூர் மாநிலம் மீதிலான எதிர்க்கட்சியின் பிடிமானம் ஆட்டம் கண்டுள்ளது என்றே சொல்ல வேண்டும். காரணம், இம் மாநிலத்தில் பாஸ் குறிப்பிடத்தக்க செல்வாக்கை கொண்டுள்ளது. புதிய எதிர்க்கட்சிக் கூட்டணியான பக்காத்தான் ஹராப்பானுக்கு இது முட்டுக்கட்டை யாக விளங்கும் என்று நம்பப்படுகிறது.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img