img
img

விமான நிலையங்களில் தமிழ். மீண்டும் தலையிடுவோம்.
திங்கள் 03 ஜூலை 2017 12:54:51

img

கோலாலம்பூர், மலேசிய விமான நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் மொழி இடம் பெறவில்லையென்று மலேசிய நண்பன் நாளிதழில் செய்தி வெளி வந்திருக்கிறது. இந்தப் பிரச்சினை தீர்க்கப்படவேண்டுமானால் அமைச்சரவையில் முடிவு எடுக்க வேண்டுமென்றும் அமைச்சரவை அனுமதி கொடுத்தால் அறிவிப்புப் பலகையில் தமிழில் எழுதுவதில் எங்களுக்கு ஆட்சேபனை இல்லையென்றும் விமான நிலைய பயனீட் டாளர் பிரிவு அதிகாரி ஜகார் தெரிவித் ததாக பத்திரிகைச் செய்தி கூறுகிறது. இந்த பிரச்சினையை ம.இ.கா.வின் தேசியத் தலைவரும் சுகாதார அமைச்சருமான டத்தோ ஸ்ரீ டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் கவனத்திற்கு கொண்டு செல் வோம். மலேசியத் தமிழ்க் காப்பகத்தின் பிரதிநிதிகள் 5.5.11 ஆம் நாள் மாஸ் நிர்வாக இயக்குநர் டான்ஸ்ரீ பசீர் அகமட்டுடன் நடத்தப்பட்ட பேச்சு வார்த் தையின் போது தமிழில் ஏன் அறிவிப்பு செய்யப்பட வேண்டு மென் பதற்கான காரணங்களை அறிக்கை வழி சமர்ப்பித்தோம். எங்களின் கோரிக் கையில் நியாயம் இருப்பதை அவரும் ஒப்புக் கொண்டார். அந்த சந்திப்பிற்கு ஏற்பாடு செய்தவரும் டாக்டர் எஸ்.சுப்பிரமணியம் தான். விமான நிலை அதிகாரியை சந்தித்து விவாதித்த விபரத்தை அமைச்சரின் கவனத்திற்கு கொண்டு சென்றோம். அவரும் நடவடிக்கை எடுத்து தமிழில் அறிவிப்பு செய்ய ஏற்பாடுகளை செய்தார்.ஆனால், தமிழில் அறிவிப்பு செய்யாததை மேலவையில் கேள்வி எழுப்பிய உடனேயே தமிழில் ஒலிப்பரப்ப நட வடிக்கை எடுக்கப்பட்டதாக மேலவை உறுப்பினர் ஒருவர் கூறியதை ஊடகங்கள் அவரின் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்து, எங்களின் உழைப்பை மறைத்து விட்டது. அதனால் இனிமேல் விமான நிலையை தமிழ் மொழிப் பிரச்சினையில் தலையிடுவது இல்லை என்ற முடிவில் இருந்தோம். இப்போது தமிழ்ப்பிரச்சினை மீண்டும் தலைதூக்கி இருப்பதால் தலையிட முடிவு செய்தி ருக்கிறோம் என்று மலேசிய தமிழ்க் காப்பகத்தின் தலைவர் சு.வை.லிங்கம் ஓர் அறிக்கை யில் கூறியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img