மலாக்கா, இங்குள்ள மலாக்கா மருத்துவ மனையில் ‘ஒ’ வகை இரத்தம் தேவைக்குக் குறைவாக இருப்பதால் உடனடியாக இவ்வகை ரத்தக் குரூப்பை உடையவர்கள் இரத்த தானம் செய்யுமாறு மாநில சுகாதார துறையின் இயக்குனர் டாக்டர் கசாலி ஒத்மான் கேட்டுக் கொண்டார். மலாக்கா மருத்துவமனையிலிருந்து தான் அந்த மாநிலத்தில் உள்ள தனியார் மருத்துவமனை உட்பட எல்லா மருத்துவமனைகளுக்கும் தேவையான இரத்தம் அனுப்பப்படுகிறது. கிடைப்பதற்கு அரிய ரத்த குழுவான ‘ஒ’ வகை இரத்தத்தின் கையிருப்பு தேவைக்கு குறை வாக உள்ளதால் அவசர நேரத்தில் போதிய அளவு இல்லாமல் போய்விடும் என்று அவர் கூறினார். இதனிடையே, மற்ற வகை இரத்தக் குழு உடையவர்களும் தாராளமாக வந்து ரத்த தானம் செய்யலாம் என அவர் தெரிவித்தார். அப்படி தானம் செய்ய விரும்புவோர், காலை 11 மணி தொடங்கி மாலை 4 மணிக்குள் மலாக்கா மருத்துவனையின் ரத்த தானம் செய்யும் பிரிவுக்குச் சென்று தானம் செய்யலாம் என அவர் கேட்டுக் கொண்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்