img
img

பொதுமக்கள் மத்தியில் தேவையற்ற அச்சத்தை உருவாக்குகிறார் மகாதீர்
ஞாயிறு 02 ஜூலை 2017 13:58:16

img

கோலாலம்பூர், முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் பொதுமக்கள் மத்தி யில் தேவையற்ற அச்சத்தை உரு வாக்கி வருவதாக கெராக்கான் நேற்று சாடியது. ஆட்சியில் இருக்கும் அரசாங்கம் எதிர்க்கட்சியின் செல்வாக்கை கட்டுப்படுத்தி அடக்கிவைக்க தலைவர்களை கைது செய்வதுடன் பொது ஆர்ப்பாட்டங் களுக்கு தடை விதிக்கும் என டாக்டர் மகாதீர் கூறி பொது மக்களின் மத்தியில் பயத்தை ஏற்படுத்தி வருவதாக கெராக்கான் தலைவர் டத்தோஸ்ரீ மா சியூவ் ஹியோங் கூறினார். பிபிபிஎம் செயல் தலைவரு மான டாக்டர் மகாதீர் கூறுவது தவறு என குறிப்பிட்ட மா சியூவ் ஹியோங், அடுத்த பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப் பான் வெற்றி பெற்றால், பிரதமர் பொறுப்பிற்கு மீண்டும் வரும் பட்டியலில் மகாதீர் இப்போது இடம் பெற்று இருப்பதால் இந்த குற்றச்சாட்டு அவருடைய சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும் என தெரிவித்தார். ஆட்சியில் உள்ள அரசாங்கத் தைத் தூற்ற, மகாதீர் ஆதாரமற்ற மற்றும் குரோத நோக்கமுடைய குற்றச்சாட்டு களை சுமத்துவதாக அவர் கூறினார். அர சாங்கத்திடம் இருந்து அரசியல் செல்வாக்கை கவர்ந்து இழுக்க அச்சத்தை உருவாக்கக் கூடிய தந்திரங்களை அந்த முன்னாள் பிரதமர் நாடுவதாக அவர் மேலும் தெரிவித்தார். பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் தலைமையிலான அரசாங் கத்தின் தலைமைத்துவத்தை நேற்று முன்தினம் குறைகூறிய டாக்டர் மகாதீர், எதிர்க்கட்சி தலைவர்களுக்கு எதிராக சட்ட நடவ டிக்கைகள் எடுப்பதன் மூலம் எதிர்க்கட்சியை அது பயமுறுத்தி வருவதாக குறிப்பிட்டிருந்தார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img