பெட்டாலிங் ஜெயா தனியார் நிறுவனங்களில் மருத்துவப்பட்டம் பெற்று பயிற்சி மருத்துவர் இட ஒதுக்கீட்டிற்காக காத்திருக்கும் 300 பேரை நிரந்தர அரசுப் பதவிகளுக்கு ஏற்றுக் கொள்ளவதற்கு எஸ்பிஎம் நிலையிலான மலாய்மொழிச் சான்றி தழை அவர்கள் பெற்றிருக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. முன்பு பொதுச் சேவையில் சேர் வதற்கு ஓ-லெவல் பிஎம் அல்லது பஹாசா கெபாங்சான் ஏ (பிகேஏ) தகுதி ஏற்றுக் கொள்ளப்பட்டது. எனினும் இவ்வாண்டு ஜனவரி முதல் அது போன்ற தகுதியைக் கொண்டிருப்பவர்கள் நிராகரிக்கப்படுகிறனர். விதிவிலக்கு ஏதும் தரப்படவில்லை என பாதிக்கப்படுள்ள மருத்துவப் பட்டதாரிகள் கூறுகின்றனர். நான் மலே சிய மருத்துவ மன்றத்தின் (எம்எம்சி)யின் அனுமதியைப் பெற்ற பிறகு பயிற்சி மருத்துவர் இடம் கேட்டு பொதுச் சேவைத் துறைக்கு கடந்தாண்டு செப்டம்பரில் விண்ணப்பித்தேன். எனினும் எஸ்பிஎம் நிலையிலான மலாய் மொழி அல்லது அதற்கு சமமான தகுதியை நான் பெற்றிருக்க வில்லை எனக் கூறி பயிற்சி மருத்துவருக்கு தேர்வாகவில்லை என பிஎஸ்சி அதிகாரி தன்னிடம் டிசம்பரில் தெரிவித்ததாக பாதிக்கப்பட்டுள்ள பட்டதாரி ஒருவர் கூறியுள்ளார். அது தனக்கு ஏமாற்ற மளிப்பதாகவும் மீண்டும் இடைநிலைப்பள்ளிக்கு செல்வது போன்ற உணர்வை ஏற்படுத்தியுள்ளது என்றும் அவர் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்