சிலிம் ரிவர், கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் முன்னால் சென்று கொண்டிருந்த போக்குவரத்து துறையின் வாகனத்தில் மோதியதால் மோட்டார் ஓட்டுநர் இ.நரேந்திரன் (வயது 19) பலியாகியுள்ளார்.இச்சம்பவம் நேற்று இரவு 10.15 மணியளவில் வடக்கு தெற்கு நெடுஞ்சாலையின் 364ஆவது கிலோ மீட்டரில் (சிலிம் ரிவர் அருகில்) நிகழ்ந்துள்ளது. தெலுக் இந்தான், தாமான் டேசா பக்தி எனும் இடத்தைச் சேர்ந்த நரேந்திரன் ஓட்டி வந்த ஈஎக்ஸ்5 ரக மோட்டார் சைக்கிள் போக்குவரத்து அதிகாரிகள் பய ணித்த வாகனத்தின் பின்புறத்தில் மோதியுள்ளது. இதனால் அவர் ஸ்தலத்திலேயே உயிரிழந்துள்ளார்.பழுதான வேனுக்கு பின்னால் போக்குவரத்து அதி காரிகள் சென்றுள்ளனர். திடீரென அதிகாரிகளின் வாகனத்தை மோதிய மோட்டார் ஓட்டி சாலையின் வலது புறம் தூக்கி எறியப்பட்டுள்ளார். அவ்வழியே வந்த கார் மேலும் அவரை மோதியதால் பலத்த காயங்களுக்கு ஆளாகி அந்த இளைஞர் அங்கேயே உயிரிழந்துள்ளார்.இந்த சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் இரவு 10.35 மணியளவில் அங்கு விரைந்ததாக தீயணைப்புப் படையின் பேச்சாளர் தெரிவித்தார். சம்பவம் நிகழ்ந்த இடத்திற்கு வந்த மருத்துவ அதிகாரிகள் மோட்டார் ஓட்டுநர் உயிரிழந்து விட்டதை உறுதிப்படுத்தினர்.பிரேதப் பரிசோதனைக்காக பலி யானவரின் சடலம் சிலிம் ரிவர் பொது மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. இச்சம்பவத்தை போலீஸ் பேச்சாளர் உறுதிப்படுத்தினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்