புத்ராஜெயா, இ-கார்ட் என்ற அமலாக்க அட்டைகளை பெறுவதற்கு ஏதுவாக முதலாளிகள் தங்களுடைய வெளி நாட்டுத் தொழிலாளர்களை பதிவு செய்ய குடிநுழைவுத் துறை போதிய கால அவகாசம் வழங்கி இருந்ததாக துணைப் பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமட் ஜாஹிட் ஹமிடி கூறினார். முதலாளிகள் அல்லது முதலாளிகள் சங்கங்களில் இருந்து கோரிக்கைகள் வந்தாலும், பதிவுக் காலம் நீட்டிக்கப்பட மாட்டாது என்று உள்துறை அமைச் சருமான டாக்டர் அகமட் ஜாஹிட் தெரிவித்தார். இருபத்து மூன்று விழுக்காட்டினர் மட்டுமே பதிவு செய்து கொண்டுள்ளனர் என்ற போதிலும், தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தாபா அலி பலமுறை எச்சரிக்கை விடுத்துள்ளார் என்பதால், நாங்கள் இந்த விவகாரத்தில் கண்டிப்புடன் இருந்தே ஆக வேண் டும் என்றார் அவர். சட்டவிரோத குடியேற்றவாசிகள் பிழைப்புக்காக இங்கு வந்துள்ளார்கள். அவர்கள் இதை சட்டப்படி செய்தார்களேயானால், அவர்களை நாம் தடுத்து நிறுத்த மாட்டோம் என்று அவர் செய்தியாளர்களிடம் கூறினார். புத்ராஜெயாவில் ஸ்ரீசத்ரியாவில் உள்ள தனது அதிகாரப்பூர்வ இல்லத்தில் நேற்று ஹரி ராயா திறந்த இல்ல உபசரிப்பை நடத்திய அவர், இந்த விவரத்தை செய்தியாளர்களிடம் தெரிவித்தார். இவ்வாண்டு பிப்ரவரி 15ஆம் தேதி அறிமுகப்படுத்தப்பட்ட இந்த இ-கார்ட, சட்டவிரோத தொழிலாளர்களுக்கான வேலை வாய்ப்பை தற்காலிகமாக உறுதிப்படுத்தும் ஒரு நடவடிக்கையாகும்.தொழிலாளர்களுக்கு இலவசமாக வழங்கப்படும் இந்த அட்டை 2018 பிப்ரவரி 15ஆம் தேதி வரை செல்லு படியாகும். இந்த தேதிக்குள் முதலாளிகள் தங்களுடைய சட்டவிரோத தொழிலாளர்களை பதிவு செய்யும் செயல்முறையை பூர்த்தி செய்ய இந்த இ-கார்ட் ஏற்பாடு போதிய கால அவகாசம் வழங்கும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்