img
img

அமைச்சரவை அங்கீகரித்தால் மட்டுமே விமானநிலையத்தில் தமிழுக்கு இடம்
ஞாயிறு 02 ஜூலை 2017 11:44:15

img

ஆறுமுகம் பெருமாள் சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தில் மட்டுமின்றி நாட்டின் பிற விமான நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளிலும் தமிழ் மொழி இடம் பெற வேண்டுமானால் அமைச்சரவை அங்கீகரிக்க வேண்டும் என்று விமான நிலையங்களை வழி நடத்தும் மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் ஹோல் டிங்ஸ் நேற்று அறிவித்துள்ளது. விமான நிலையங்களின் அறிவிப்புப் பலகைகளில் மட்டுமின்றி விமானப் பயண புறப்பாடு, வந்திறங்குதல் போன்ற முக்கிய அறிவிப்புகளை ஒரு மொழி யில் செய்ய வேண்டுமானால் மலேசிய அமைச்சரவையின் அங்கீகாரம் தேவைப்படுகிறது என்று மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் ஹோல்டிங்சின் பயனீட்டாளர் விவகார மற்றும் நிறுவன தொடர்புத் துறை அதிகாரி ஹஜார் தெரிவித்தார். மலேசிய அமைச்சரவை அங்கீகரிக்கக்கூடிய எந்தவொரு உத்தரவையும் நிறைவு செய்வதற்கு மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் எப்போதுமே தயாராக இருப்பதாக ஹஜார் விளக்கம் அளித்தார். சிப்பாங், கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையம் திறக்கப்பட்டு கடந்த ஜூன் 27ஆம் தேதியுடன் 19 ஆண்டுகள் பூர்த்தியடைகிறது. இந்த 19 ஆண்டுகளில் தேசிய மொழியான மலாய் மொழியுடன் ஆங்கிலம் விமான நிலைய அறிவிப்பு பலகைகளிலும் அறிவிப்புகளிலும் முக்கிய பயன்பாடாக இருந்து வருகிறது. இந்நிலையில் இரு வகையான சீன மொழிகள், அரபு, ஜாவி மற்றும் இன்னும் பிற மொழிகளை விமான நிலையத்தில் அறிமுகப்படுத்திய வேளையில் மலேசியாவில் மூன்றாவது பெரிய இனமாக விளங்கும் இந்தியர்களின் தமிழ்மொழி விடுப்பட்டது ஏன் என்று இரு தினங்களுக்கு முன்பு மலேசிய நண் பன் மக்களை பேட்டி கண்டு சிறப்புக் கட்டுரையை வெளியிட்டது. தமிழ்மொழியைவிடவா அரபு மொழி முக்கியம் என்ற கேள்வி யையும் வாசகர்கள் முன் வைத்தனர். விமான நிலையத்திற்கு பொறுப்பேற்றுள்ள மலே சிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் ஹோல்டிங்ஸின் இந்தச் செயலை நீலாய் ஜசெக சட்டமன்ற உறுப்பினர் ஜி.அருள்குமாரும் கடுமையாக இடித்துரைத்தார். நீலாய் சட்டமன்ற உறுப்பினர் என்ற முறையில் மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் ஹோல்டிங்ஸ் விளக்கம் அளிக்க வேண்டும் என்று கேட்டுக் கொண் டார். இதற்கு எதிர்வினையாற்றும் வகையில் பதில் கடிதத்தை அனுப்பிய மலேசிய ஏர்போர்ட்ஸ் பெர்ஹாட் மேற்கண்ட விளக்கத்தை அளித்துள்ளது. அப்படி யென்றால் இந்தியர்களை பிரதிநிதிப்பதாக கூறிக்கொண்டு மஇகா வாயிலாக அமைச்சரவையில் இடம் பெற்றுள்ள கட்சியின் தேசியத் தலைவர் டத் தோஸ்ரீ டாக்டர் சுப்பிரமணியம், விமான நிலையத்தில் தமிழ் மொழி பயன்பாடு இல்லாதது குறித்து அமைச்சரவையில் ஏன் வாயை திறக்கவில்லை என்று அருள்குமார் தனது வலைத் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
பேரா மாநில 2024 பட்ஜெட்: மீண்டும் தமிழ்ப்பள்ளி மாணவர்களுக்கு நிதி

இஸ்லாமியர் அல்லாதவர்களுக்கு வெ.10 மில்லியன் ஒதுக்கீடு

மேலும்
img
மலேசிய மக்களின் ஒத்துழைப்புடன் 5G பிரத்தியேக சேவையுடன் செல்கோம் டிஜி

60ஆம் ஆண்டு மலேசிய தினக் கொண்டாட்டத்திற்காக மலேசிய மக்களின்

மேலும்
img
பிரசித்தி ஹலால் தொழில்துறையில் மேம்பாட்டிற்கு ஏற்ப உலக அரங்கில் பெறும் மலேசிய ஹலால் முத்திரைகள்

ஹலால் என்ற ஒன்றைத் தேடுவது (இஸ்லாமிய சட்டத்தில் அனுமதிக்கப்பட்டது)

மேலும்
img
மடானி லட்சியக் கனவு இன்றைய உலகிற்கு உரியது

மடானி லட்சியக் கனவு திட்டம் என்பது புதிதான ஒன்று அல்ல. இது இஸ்லாமிய ஆரம்ப

மேலும்
img
நாட்டின் பொருளாதாரத்தை மறுசீரமைப்பு செய்கிறது மடானி பொருளாதாரம்

மலேசியாவை மேம்படுத்துவதற்காக உருவாக்கப்பட்ட, ஆனால் நிறைவேறாமல் போன

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img