ஆர்.தசரதன் பட்டர்வொர்த், அண்மையில் தமிழகம் பல்லாவரம் வேல்ஸ் பல்கலைக் கழகத்தில் நடந்த உலக பரத நாட்டிய சாதனை நிகழ்ச்சியில் பினாங்கு மாநில முத்தமிழ் சங் கத்தை சேர்ந்த கோகிலா நடனக் குழுவைச் சேர்ந்த நடன மணிகள் கின்னஸ் சாதனை விருதை வென்று சாதனை புரிந்தனர். அவர்களை பாராட்டும் நிகழ்வு ஒன்று அண்மையில் செபராங் ஜெயாவில் அமைந்துள்ள உண வகத்தில் சிறப்புடன் நடைபெற்றது. பினாங்கு மாநிலத்தில் இந்தியக் கலைகளை பாதுகாத்தும் அதனை அழியாமல் பல நடவடிக்கைகளை மேற் கொண்டு குறிப்பாக அக்கலைகள் இளைய தலைமுறையினருக்கு பயிற்றுவித்து வரும் பழம்பெரும் இயக்கமாக திகழும் பினாங்கு முத்தமிழ் சங்கம் இந்த பாராட்டு விழாவினை ஏற்பாடு செய்திருந்தது. இந்நிகழ்வுக்கு சங்கத்தின் தலைவர் கா.வு இளங்கோவன் தலைமையேற்ற வேளை யில், உடன் சமூக சேவையாளர் டத்தோ நவநீதன் சிறப்பு பிர முகராக கலந்து கொண்டு சிறப்பித்தார். இந்நிகழ்வில் வரவேற்புரை யாற்றிய பினாங்கு மாநில முத்தமிழ் சங்க தலைவர் முத்தமிழ் மணி கா.வு.இளங்கோவன், இந்தியக் கலைகள் இந்த மண்ணைவிட்டு மறையாமல் காப்பது அவசியம் என்றும், இளைய தலைமுறையினர் அக்கலைகளை கற்று கொள்வதன் மூலமாக தங்கள் வாழ்க் கையில் சிறந்து விளங்க முடியும் என்பதுடன் அக்கலைகளை அழியாமல் காக்க முடியும் என்றும் அவர் நம்பிக்கை தெரிவித்தார். உலக சாதனையாக கின்னஸ் சாதனை பெறுவது எளிதான காரியம் இல்லை என்றும் அதனை பெறு வதற்கு, நடனமணிகள் கொண் டிருந்த ஆர்வம்,விடா முயற்சி, நடன மாஸ்டர் கோகிலாவின் ஒன்றிணைந்த பயிற்சி இந்த சாதனைக்கு முக்கிய காரணம் என்றும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்