img
img

செராஸில் அமைகிறது நாட்டின் 527ஆவது தமிழ்ப்பள்ளி.
சனி 01 ஜூலை 2017 15:32:51

img

சுப்ரா காஜாங், காஜாங் நகருக்கு அருகாமையிலுள்ள பண்டார் செராஸ் மக்கோத்தா வட்டாரத்தில் நாட்டின் 527 ஆவது தமிழ்ப்பள்ளியாக மக்கோத்தா தமிழ்ப்பள்ளி நிர் மாணிக்கப்படவுள்ளது.பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் முயற்சியின் கீழ் புதியதாக 7 புதிய பள்ளிகளை கட்டுவதற் காக சிறப்பு நிதிகள் ஒதுக்கப்பட் டன. இந்த 7 புதிய பள்ளிகளை கட்டுவதற்கான பணிகள் கட் டங்கட்டமாக நடைபெற்று வருகின்றன. அவ்வகையியில் பண்டார் செராஸ் மக்கோத்தா தமிழ்ப் பள்ளிக்கான அடிக்கல் நாட்டு விழா நேற்று காலையில் நடை பெற்றது. மஇகா தேசியத் தலை வர் டத்தோஸ்ரீ டாக்டர் சுப்பிர மணியம் அடிக்கல் நாட்டு விழாவிற்கு தலைமையேற்றார். மஇகாவின் தேசியத் துணைத் தலைவர் டத்தோஸ்ரீ எஸ்.கே. தேவமணியும், கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன் உட்பட பல முக்கிய பிரமுகர்க ளும் இந்நிகழ்வில் கலந்து கொண்டனர். நாட்டின் 527 ஆவது தமிழ்ப் பள்ளியாக பண்டார் செராஸ் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி கட்டப்படவுள்ளது. ஒரு நவீன தமிழ்ப்பள்ளிக்குரிய அனைத்து வசதிகளையும் கொண்டிருக்கும் மிகச் சிறந்த பள்ளியாக உருவாகவிருக்கும் மக்கோத்தா தமிழ்ப்பள்ளி அடுத்த ஆண்டு ஆகஸ்ட் மாதத்தில் முழுமையாகப் பூர்த்தியடையும்.செராஸ் நகரின் மையப் பகுதியில் அமைந்திருப்பதால், அந்தப் பகுதியிலுள்ள சுற்று வட்டார இந்தியர்கள் அதிக அளவில் இங்கு தங்களின் பிள்ளைகளைத் தமிழ்ப்பள்ளிக் கல்வி பெற அனுப்ப இயலும் என்றும் சுகாதார அமைச்சருமான டாக்டர் சுப்ரா அடிக்கல் நாட்டு விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்தார். 24 வகுப்பறைகளைக் கொண்டிருக்கும் இந்தப் பள்ளியில் பாலர் வகுப்புகளுக்கான வசதிகளும் இடம் பெற்றிருக்கும். 21.08 மில்லியன் வெள்ளி செலவில் இந்தப் பள்ளி நிர்மாணிக்கப்படவிருக்கின்றது என்று அவர் கூறினார். பிரதமர் அறிவிப்பு செய்த 7 புதிய தமிழ்ப்பள்ளிகள் கெடா மாநிலத்தின் கெலாடி, பேரா மாநிலத்தின் ஹீவுட், கிள்ளானில் செந்தோசா, பெட்டாலிங் ஜெயா வில் பிஜேஎஸ் 1, மாசாயின் ஸ்ரீ ஆலாம், பண்டார் மக்கோத்தா செராஸ் ஆகிய பள்ளிகளில் இப்பள்ளி 527ஆவது ஆகும். அதே வேளையில் சிலாங்கூர் மாநிலத்தின் 99ஆவது தமிழ்ப்பள்ளி இதுவாகும். விரைவில் பிஜேஎஸ் 1 தமிழ்ப்பள்ளி கட்டப்பட்டவுடன் இந்த எண்ணிக்கை 100ஆக அதிகரிக்கும் என கல்வி துணையமைச்சர் கமலநாதன் கூறினார். இதற்கிடையே மஇகாவின் இளைஞர் பிரிவுத்தலைவர் டத்தோ சிவராஜ், சிலாங்கூர் மாநில தமிழ்ப்பள்ளிகளின் அமைப்பாளர் டேனியல், கல்வியமைச் சின் அதிகாரி டத்தின் ஃபரிடா, உலுலங்காட் கல்வி இலாகாவின் துணைத்தலைவர் மூசா பின் இஸ்மாயில், உலு லங்காட் மஇகா தலைவர் டத்தோ கோபாலகிருஷ்ணன் ஆகியோரோடு இந்த புதிய பள்ளியின் நடவடிக்கை செயற்குழுவினர் செல்வராஜா, சோழ பாண்டியன், டாக்டர் செல்வா, வடிவேலு ஆகியோரோடு மஇகா தலைவர்கள், அரசு சாரா அமைப்புகளின் தலைவர்கள், பள்ளி தலைமையாசிரியர்கள், ஆசிரியர்கள், பொதுமக்கள் என ஐநூறுக்கும் அதிகமான மக்கள் கலந்து கொண்டனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img