பெட்டாலிங் ஜெயா, சீனி உட்கொள்வதால் ஏற்படக் கூடிய அபாய நோய்கள் குறித்து இளம் வயதிலேயே பிள்ளைகளுக்கு போதிக்கும்படி பெற்றோர்களையும் ஆசிரியர் களையும் மலேசிய மருத்துவர் சங்கம் (எம்எம்ஏ) கேட்டுக் கொண்டிருக்கிறது. சிகரெட் பாக்கெட்டுகளில் எழுதப்பட்டிருக்கும் எச்சரிக்கை வாசகங்களைப் போல், சீனியின் அபாயங்கள் குறித்தும் பிள்ளைகளுக்கு எச்சரிக்கை விடுக்கும் வகையில் மிட்டாய் பாக்கெட்டுகளில் வாசகங்களை பொறிக்கும்படி பிரிட்டனில் உள்ள டாக்டர்களும் பல் மருத்துவர்களும் கேட்டுக் கொண்டிருப்பதாக கடந்த செவ்வாய்க்கிழமை ஒரு பிரிட்டிஷ் பத்திரிகையில் செய்தி வெளியானதைத் தொடர்ந்து எம்எம்ஏ இந்த அறிவுரையை வழங்கி இருக்கிறது. உடல் பருமத்திற்கும் பல் சொத்தைக்கும் சீனி காரணமாக விளங்க முடியும் என்ற வாசகங் களோடு சொத்தைப் பல், குண்டான பிள்ளைகள் இடம் பெற்ற படங்களும் மிட்டாய் தாள்களின் முன் பகுதியில் பொறிக்கப்பட்டு இருக்க வேண்டும் என்று தி டெய்லி மெயில் கூறிற்று. எனினும், இம்மாதிரியான வாச கங்கள் புகைப்பவர்களை தடுத்து நிறுத்துவதில் வெற்றி பெறவில்லை என்பது நிரூபிக்கப்பட்டு இருப்பதாக எம்எம்ஏ தலைவர் டாக்டர் ரவீந்திரன் ஆர் நாயுடு கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்