கோலாலம்பூர், பிரதமர் டத்தோ ஸ்ரீ நஜீப் துன் ரசாக் அடுத்த பொதுத் தேர்தலை நடத்தாமல் கூட இருக்கலாம் என்று துன் டாக்டர் மகாதீர் முகமட் கூறுகிறார். பொதுத் தேர்தலை நடத்துவதும் நடத்தாததும் அவருடைய அதிகாரத்திற்கு உட்பட்டது. சட்டங்களைப் பற்றி அவருக்கு கவலை இல்லை என்று டாக்டர் மகாதீர் நேற்று ஒரு வலைப்பதிவில் குறிப்பிட்டார். அவசர நிலையை அறிவிக்க வேண்டிய சூழ்நிலை எழாத போதிலும் நஜீப் அதை செய்ய முடியும் என்று அவர் கூறினார். அரசியலமைப்புச் சட்டத்தை கூட அவர் பின்பற்றாமல் போகக் கூடும் என்றும் மகாதீர் தெரிவித்தார். இந்த விவகாரத்தில் அவருக்கு அம்னோ, தேசிய முன்னணி தலைவர்களின் முழு ஆதரவு கிடைக்கும். தங்களின் தலவைர் அவரது அதிகாரத்தை தவறாக பயன்படுத்துகிறார் என்பது அவர்கள் அனைவருக்கும் தெரியும் என்றார் மகாதீர். வெளிநாடுகளில் உள்ள புலன் விசாரணையாளர்கள் நஜீப்பிற்கு எதிராக மேற்கொண்டு வரும் விசாரணைகள் பற்றியும் அவருக்கு எதிராக அவர்கள் கூறி வரும் குற்றச்சாட்டுகள் பற்றியும் அவர்கள் அனைவருக்கும் தெரியும் என்று டாக்டர் மகாதீர் மேலும் கூறினார். 1 எம்டிபி விவகாரத்தில் அமெரிக்க நீதித்துறை வெளியிட்ட அறிக்கைகள் குறித்தும் சிங்கப்பூரில் வங்கிகள் மூடப்பட்டு கைது நடவடிக்கை மேற்கொள் ளப்பட்டது பற்றியும் அவர்களுக்கு நன்றாகவே தெரியும் என்றும் அவர் குறிப்பிட்டார். முந்தைய தலைவர்களால் கட்டி காக்கப்பட்ட நாடு மற்றும் அரசாங் கத்தின் நற்பெயருக்கும் மக்களுக்கும் எது நேர்ந்தாலும் அதை பற்றி எல்லாம் அமைச்சர்களுக்கும் மசீச, ம.இ.கா. தலைவர்களுக்கும் எந்த கவலையும் கிடையாது என்று டாக்டர் மகாதீர் மேலும் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்