புத்ரா ஜெயா, கள்ளக் குடியேறிகளைக் கைது செய்யும் நடவடிக்கை இன்று முதல் நாடு முழுவதும் முழு வீச்சில் தொடங்கப்பட்டுள்ளது.மின்னியல் அமலாக்க அட்டைக்கு விண்ணப்பிக்கும் காலக்கெடு நேற்று ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைந்துள்ள நிலையில் இந்தக் கைது வேட்டை மேற்கொள்ளப்படுவதாக வும் தங்களின் அந்நிய நாட்டு பணியாளர்களைப் பதிவு செய்யாமல் இருக்கும் முதலாளிகளும் இதில் அடங்குவர் எனவும் குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோ ஸ்ரீ முஸ்தாஃபார் அலி தெரிவித்தார். பிப்ரவரி 15ஆம் தேதி முதற் கொண்டே அந்நிய நாட்டவர்கள் இ-கார்டுக்கு விண்ணபிக்க கால அவகாசம் வழங்கப்பட்டது. இந்த வாய்ப்பைப் பயன்படுத் தத் தவறிய முதலாளிகள், கைது நடவடிக்கையின்போது குடிநுழைவுத்துறையையோ உள்துறை அமைச்சையோ குறைகூறக் கூடாது. ஏனென்றால், இந் தக் கைது நடவடிக்கையைப் பற்றி முன்கூட்டியே அறிவிப்பு செய்தாகி விட்டது. ஒருவேளை கள்ளக் குடியேறிகளை முதலாளிகள் தற்காக்க முனைந்தால், அவர்களுக்குக் குறைந்தபட்சம் வெ.10,000 அபராதம் அல்லது சிறைத்தண் டனை விதிக்கப்படும் என அவர் குறிப்பிட்டார். இங்கு வேலை செய்யும் அந்நிய நாட்டவர்கள் பெர்மிட் பெறும் வகையில் இந்த இலவச இ-கார்டு திட்டம் அமல்படுத்தப்பட்டது. ஏறக்குறைய 4 இலட்சத்திலிருந்து 6 இலட்சம் வரையிலான கள்ளக் குடியேறிகள் இதில் விண்ணப்பம் செய்வார்கள் என எதிர் பார்க்கப்பட்டது. ஆனால், 155,680 பேர் மட்டுமே விண்ணப்பம் செய்துள்ளனர். இதுவரையில் 140,746 இ-கார்டுகள் வெளியிடப்பட்டுள்ளன. 26,957 முதலாளிகள் பதிவு செய்துள்ளனர். எதையும் இறுதி நேரத்தில்தான் செய்யும் பழக்கம் நம் நாட்டவர்களுக்கு அதிகமாக உள்ளது. ஆனால், இந்த விண்ணப்பத்திற்கான பதிவு ஜூன் 30ஆம் தேதியோடு முடிவடைந்து விட்டது. மேலும், இது மீண்டும் தொடங்கப்படாது. கைது செய்யப்படும் கள்ளக் குடியேறிகள் தடுப்பு முகாமில் வைக்கப்பட்டு பின் நாட்டை விட்டு அனுப்பப்படுவதோடு அவர்களின் பெயர் கறுப்புப் பட்டியலிலும் இடம்பெறும் எனவும் அவர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்