ஆறுமுகம்பெருமாள் சிப்பாங், உலகின் அதிநவீன விமான நிலையங்களின் பட்டியலில் 13-ஆவது இடத்தை வகிக்கும் சிப்பாங்கில் உள்ள கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலை யத்தின் அறிவிப்புப் பலகைகளில் இன்னும் தமிழ் எழுத்துப் பொறிக்கப்படாதது மிகப்பெரிய குறையாகவே இருந்து வருகிறது. அவ்விமானம் திறக்கப் பட்டு ஜூன் 27-ஆம் தேதியுடன் 19 ஆண்டுகள் நிறைவாகியுள்ளன. கோலாலம்பூர் அனைத்துலக விமான நிலையத்தின் அறிவிப்புப் பலகைகளில் தமிழ் எழுத்துக்கள் எழுதப்படவேண்டும் என பொது இயக்கங்களைச் சேர்ந்த தமிழ் ஆர்வலர்கள் பலமுறை போர்க்கொடி உயர்த்தி வந்துள்ளனர். எனினும், தொடர்ந்து அங்கு தமிழ்மொழிக்கு இருட்டடிப்பு செய்யப்படுவது குறித்து அவர்கள் தங்களின் ஆட்சேபத்தையும் கண்டனத்தையும் தெரிவித்துள்ளனர். நாட்டின் முன்னாள் பிரதமர் துன் மகாதீர் முகமட் சிந்தனையில் உருவானதுதான் கோலாலம் பூர் அனைத்துலக விமான நிலையம். அதன் கட்டுமானம் 1990- ஆண்டு தொடங்கி, 1998 ஜூன் மாதம் 27-ஆம் தேதி அப்போதைய மாமன்னர் துவாங்கு ஜபார் விமான நிலையத்தை அதி காரப் பூர்வமாக திறந்து வைத்தார். பல அதிநவீன தொழில் நுட்பத்துடன் கட்டப்பட்டுள்ள இந்த விமான நிலையத்தில் பயணிகளின் நலனுக்காக வைக்கப்பட் டுள்ள அறிவிப்புப் பலகைகளில் நமது நாட்டின் அதிகாரப்பூர்வ மொழியான தேசிய மொழி உட்பட ஆங்கிலம், அரபு, ஜாவி மற்றும் இரு பிரிவுகளைக் கொண்ட சீன மொழிகளிலான எழுத்துக்கள் இடம் பெற்றுள்ள நிலையில் இந்நாட்டின் மூன்றாவது இனமாக வாழ்ந்துவரும் இந்தியர்களின் தமிழ் மொழி எழுத்துக்கள் இடம்பெறவில்லை என்பது இந்நாட்டில் உள்ள ஒட்டுமொத்த இந்திய சமுதாயத்தைச் சேர்ந்தவர்களை அரசாங்கம் ஏமாற்றியதற்கு ஒப்பாகும். இவ்விமான நிலையத்தை இந்தியர்களும் முழுமையாக பயன்படுத்தி வரும் வேளையில் வெளிநாட்டு மொழிக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ள அர சாங்கமும், விமான நிறுவனமும் ஏன் தமிழர்களுக்குச் சொந்தமான தமிழ்மொழி எழுத்திற்கு மட்டும் இருட்டடிப்பு செய்திருக்கிறது என இந்நாட்டிலுள்ள தமிழ்மொழி மீது அதீத பற்று வைத்துள்ள பற்றாளர்கள் கேள்விக்கணைகளை தொடுத்துள்ளனர். இங்கு சிப்பாங்கில் செயல்பட்டுவரும் அனைத்துலக விமான நிலையம் உட்பட இரண்டாவது விமான நிலையம் ஆகியவற்றின் பல பகுதிகளில் வைக்கப் பட்டுள்ள அறிவிப்புப் பலகைகளில் தமிழ்மொழி தவிர்த்து பல மொழிகள் இடம் பெற்றிப்பது அரசாங்கம் தமிழ் மொழிக்கு உரிய மரியாதையை வழங்க வில்லை என்பதையே காட்டுகிறது என்பதை வலியுறுத்தும் வகையில் தமிழ் சார்ந்த சமுதாய இயக்கங்களைச் சேர்ந்த வர்கள் குரல் கொடுத்து வந்துள் ளனர் என்றாலும் அவர்களின் குரலுக்கு சம்பந்தப்பட்ட தரப்பினர் பதில் கொடுக்க முன் வந்தபாடில்லை.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்