புத்ரா ஜெயா, இவ்வாண்டு முதல் ஆறு மாதங்களில் தங்களின் கடப்பிதழ்களை காணடித்தவர்களின் எண்ணிக்கை 31,287 என்று குடிநுழைவுத்துறை தலைமை இயக்குநர் டத்தோஸ்ரீ முஸ்தபா அலி தெரிவித்தார். ஒருவரின் கவனக் குறைவால் கடப்பிதழ்கள் காணாமல் போய் விடுகிறது. தொலைந்து போன கடப்பிதழ் பத்திரத்திற்குப் பதிலாக புதிய ஆவணத்திற்கு விண்ணப்பம் செய்பவர்களுக்கு 200 வெள்ளியிலிருந்து ஆயிரம் வெள்ளி வரை அபராதம் விதிப்பது குறித்து குடிநுழைவு இலாகா ஆலோசித்து வருகிறது. அடையாளக் கார்டினை தொலைத்தவர்கள் புதிய கார்டு எடுப்பதற்கு அபராதம் விதிக்கப்படுகிறது.இதுவரையில் கடப்பிதழை தொலைத்தவர்களுக்கு குடி நுழைவுத்துறை அபராதம் விதித்ததில்லை. எனவே இப்போது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டிய காலக்கட்டம் நெருங்கிவிட்டது. சட்டவிதிகள் மாறத்தான் வேண்டும். முதல் முறையாக தொலைந்து விட்டால் அபராதம் 200 வெள்ளி. இரண்டாவது தடவையாக தொலைத்து விட்டால் அபராதம் 500 வெள்ளி. மூன்றாவது முறை என்றால் அபராதம் ஆயிரம் வெள்ளி. ஒருவருக்கு அபராதம் விதித்து தண்டனைக்கு உள்ளாக்குவது எங்களின் நோக்கம் அல்ல. மாறாக கடப்பிதழ் வைத்திருப்போர் பொறுப்புடன் நடந்து கொள்ள வேண்டும் என்பதே எங்களின் நோக்கமாகும்.கொள்கையளவில் குடிநுழைவு இலாகாவின் ஆலோசனைக்கு அரசு ஒப்புதல் தந்துள்ளது. விவ காரம் துணைப்பிரதமர் டத்தோஸ்ரீ டாக்டர் அகமது ஜாஹிட் ஹமிடியின் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டுள்ளது. கடப்பிதழ் காணாமல் போவது எளிதாக நடைபெறும் ஒரு செயலாக இருக்கிறது. அடிக்கடி காணாமல் போவது ஒருவரின் பொறுப்பற்ற செயல் என்றே அர்த்தம். இந்த முக்கியமான ஆவணத்தை கவனக்குறைவாக கண்ட கண்ட இடங்களில் வைத்துவிட்டு தேடுவது முறையல்ல என்றும் அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்