கோலாலம்பூர், வரும் 14 ஆவது பொதுத் தேர்தலுக்கு முன்னதாகவே எதிர்க்கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்படலாம் என்று முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் நேற்று ஆரூடம் கூறியுள்ளார். கடந்த ஆண்டு பெர்சே 5 பேரணி நடத்தப்பட்டது. இதில் எதிர்க்கட்சித் தலைவர்களும் கலந்து கொண் டனர். ஆனால் அந்த பேரணி நடைபெறுவதற்கு முன்னதாகவே பெர்சேயை சேர்ந்த தலைவர்கள் பலர் கைது செய்யப்பட்டனர். அதேபோன்று அடுத்த பொதுத் தேர்தல் நடைபெறுவதற்கு முன்னதாக அதே போன்ற ஒரு சூழல் நாட்டில் நடக்க வாய்ப்பு உண்டு என்று அவர் அச்சம் தெரிவித்தார். எதிர்க்கட்சித் தலைவர்கள் கைது செய்யப்படுவதற்கான சில சாத்தியக் கூறுகள் நடந்து கொண்டு இருக்கின்றன. அதற்கான தடயங்களை தாம் அறிய முடி வதாக அவர் குறிப்பிட்டார். எதிர்க் கட்சித் தலைவர்கள் பலர் கைது செய்யப்படும் நடவடிக்கையானது மக்களுக்கு ஆத்திரத்தை உண்டு பண்ணலாம். ஆனால் நிறைய பேர் எதிர்க்கட்சிக்கு வாக்களிக்க பயப்படுவார்கள் என்று துன் மகாதீர் குறிப்பிட்டார். எதிர்க்கட்சிக்கு வாக்களித்தது அரசாங்கத்திற்கு தெரியவந்தால் தங்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கும் என்ற அச்சத்தை வாக்காளர்கள் மத்தியில் உருவாக்குவதே அந்த நடவடிக்கையின் தந்திரமாகும் என்று மகாதீர் குற்றஞ்சாட்டினார். இத்தகைய நிலையினால் எதிர்க்கட்சிக்கு விழக்கூடிய வாக்குகள் நிச்சயம் சரிவு ஏற்படும் சாத்தியம் இருப்பதாகவும் தனது அகப்பக்கத்தில் துன் மகாதீர் குறிப்பிட்டார். அதேவேளையில் வாக்காளர்களை கவர்வதற்காக ஆளும் கட்சி மக்களுக்கும் தனது கட்சி உறுப்பினர்களுக்கும் லஞ்சம் கொடுக்கக்கூட தயங்காது என்றும் அவர் சொன்னார். சட்டத்திற்கு மீறிய அனைத்து செயல்களும் நடக்கும். இதனால் வரையில்லாமல் பணமும் கரைந்து போகும் என்று துன் மகாதீர் அச்சம் தெரிவித்தார். தேர்தல் பணியாளர்களும் அதிகாரிகளும் தங்கள் அதிகாரத்தை தவறாக பயன்படுத்த சாத்தியம் உள்ளது. வாக்குகளை திசைத்திருப்பும் சாத்தியத்தையும் அவர்கள் மேற்கொள்ளவார்கள். இதனால் நிறைய பேர் வாக்களிக்க முடியாமல் போகலாம் என்றும் அவர் குறிப்பிட்டார். மலேசியாவை கடந்த 22 ஆண்டு காலமாக வழிநடத்திய முன்னாள் பிரதமரான துன் மகாதீர், மலேசியா தற்போது போலீஸ் நாடாகி விட்டதாக குற்றஞ் சாட்டினார். தம்முடைய இந்த குற்றச்சாட்டை போலீஸ் படைத் தலைவர் மறுக்கலாம். ஆனால் போலீஸ் நாடாகி விட்டது. சட்ட ஒழுங்கு இல்லை . இது நாட்டின் சட்டவிதிமுறைகளுக்கு முரணானதாகும். ஆனால் அதனை தடுக்க போலீசார் நடவடிக்கைகளில் இறங்கியிருப்பதற்கான அறிகுறிகள் இல்லை. எனவே எதிர்க்கட்சியினர் எந்த தவற்றையும் செய் யவில்லை என்று போலீசார் உணர்ந்தாலும்கூட எதிர்க்கட்சித் தலைவர்களை அவர்கள் நிச்சயம் கைது செய்வர். பொது மக்களை விசாரணைக்கு வரும் படி அவர்கள் மிரட்டப்படலாம் என்றும் துன் மகாதீர் குறிப்பிட்டார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்