img
img

பிறப்புப் பத்திரமின்றி தவிக்கும் 5 பிள்ளைகள்
வியாழன் 29 ஜூன் 2017 17:31:04

img

பி. எம். குணா காப்பார், பிறப்புப் பத்திரம் இல்லாததால் எந்த வேலையும் இல்லாமல் வீட்டிலேயே முடங்கிக் கிடக்கும் தன்னுடைய ஐந்து பிள்ளைகளின் எதிர்காலம் குறித்து கண்ணீர் வடிக்கும் மாது, தேசிய பதிவுத் துறையின் மரபணு பரிசோதனைக்கு பணமில்லையே என்று தவியாய் தவித்துக் கொண்டிருக்கிறார். தன்னுடைய ஐந்து பிள்ளைகளின் மரபணு பரிசோதனைக்கு 2,500 வெள்ளி செலுத்தும்படி 23.5.2017 ஆம் நாளிட்டு சிலாங்கூர் மாநில தேசிய பதிவுத் துறை கடிதம் அனுப்பியுள்ளதாக பண்டார் புக்கிட் ராஜா ரெபானா அடுக்குமாடி குடியிருப்பைச் சேர்ந்த செல்லம்மா பாப்பையா (வயது 56) கூறினார். ஏற்கெனவே, வறுமையில் வாடும் சம்பந்தப்பட்ட குடும்பம் இவ்வளவு பெரிய தொகைக்கு எங்கு போவார்கள் என்று காப்பார் வட்டார சமூக ஆர்வலர் எஸ்.சத்தியமூர்த்தி கேள்வி எழுப்பினார். மேலும், சம்பந்தப்பட்ட பிள்ளைகளின் பிறப்புப் பத்திர விண்ணப்பத்தை மூன்று மாதத்திற்குள் பரிசீலிக்க வேண் டிய தேசிய பதிவுத் துறை இரண்டு ஆண்டுகளாக இழுத்தடிப்பது ஏன் என்று அவர் கேள்வி எழுப்பினார். 2015ஆம் ஆண்டு ஏப்ரலில் பிறப்புப் பத்திரம் விண் ணப்பம் செய்யப்பட்டதாக அவர் மேலும் குறிப்பிட்டார். சம்பந்தப்பட்ட குடும்பம் அனுபவித்து வரும் இன்னல்கள் குறித்து மலேசிய நண்பன் இவ்வாண்டு ஜனவரியில் விரிவான செய்தி வெளியிட்ட போதிலும் தொகுதி பக்காத்தான், பாரிசான் - மஇகா மக்கள் பிரதிநிதிகள் கண்டும் காணாமல் இருப்பது வருத்தம் அளிக்கிறது என்று அவர் சொன்னார். நா.மகேஸ்வரி (வயது 36), நா.சந்திரசேகரன் (வயது 16), நா.சரவணன் (வயது 26), இரட்டையர் நா.விஜயகுமாரன் (வயது 18), நா.விஜயகுமாரி (வயது 18) ஆகியோர் குடும்ப பொருளாதார பாரத்தைக் கூட சுமக்க முடியாமல் சிரமப்பட்டுக் கொண்டிருக்கின்றனர். காச நோயால் நீண்டக் காலமாக அவதியுற்று வருவதாக நம்பப்படும் குடும்பத்தில் மூத்த பெண் பிள்ளை, நான்கு பிள்ளைகளுக்கு தாயான நா.மகேஸ்வரி பிறப்புப் பத்திரம் இல்லாததால் மாதிரி இரத்த பரிசோதனை மேற்கொள்வதற்கே சிரமப்பட்டுக் கொண்டிருப்பதாக தெரிய வருகிறது. நாகலிங்கம் இராம சாமி (வயது 56) - செல்லம்மா பாப்பையா (வயது 56) குடியுரிமை பெற்றிருந்த போதிலும் அவர்களுடைய ஐந்து பிள்ளைகளுக்கு பிறப்புப் பத்திரம் எடுப் பதற்கு சிரமத்தை எதிர்நோக்கியுள்ளனர். நாகலிங்கத்திற்கு வேலை கிடையாது. குடும்பத்தில் ஓரிருவரின் சொற்ப வருமானத்தையே அவர்கள் எதிர் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். பத்து பிள்ளைகள் கொண்ட குடும்பத்தில் ஐந்து பிள்ளைகளுக்கு பிறப்புப் பத்திரம் உள்ளது. ஆனால், பிறப்பை தாமதமாக பதிவு செய்ததன் காரணத்தினால் மற்ற ஐந்து பிள்ளைகள் பிறப்புப் பத்திரம் இன்றி பரிதவித்துக் கொண்டிருக்கின்றனர்.

பின்செல்

தலைப்புச் செய்திகள்

img
போப் என்ற project point of Presence (pop) திட்டம்

தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்

மேலும்
img
மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை அமலாக்கம்

மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய

மேலும்
img
300 வெள்ளி என்ற குறைந்த விகிதத்தில் கடனை செலுத்துவதற்கு பி.டி.பி.டி.என். வழங்கும் வசதியான திட்டம்

கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
img
பி.டி.பி.டி.என் -பரிவுமிக்க கல்வி சேமிப்பு திட்டம் - அதிர்ஷ்ட குலுக்கல் பரிசு ஒரு லட்சம் வெள்ளி

உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img