புத்ரா ஜெயா, நாட்டின் 527-ஆவது புதிய தமிழ்ப் பள்ளிக்கூடத்தின் அடிக்கல் நாட்டு விழா நாளை 30ஆம் தேதி மிக சிறப்பாக நடைபெறவிருக்கின்றது. இந்தியர்களின் தேவைகளைப் பூர்த்தி செய்யும் வகையில் சரித்திரத்திலேயே முதன் முதலாக தேசிய முன்னணியின் கீழ் இயங்கக்கூடிய அரசாங்கம் ஏழு புதிய தமிழ்ப் பள்ளிகளை கட்டப்பட விருக்கின்றது. அதில் பாயா பெசார் தமிழ்ப் பள்ளி கட்டப்பட்டு இயங்கத் தொடங்கிவிட்டது. அதனைத் தொடர்ந்து தாமான் செந்தோசா தமிழ்ப்பள்ளி, பண்டார் ஸ்ரீ ஆலம் தமிழ்ப்பள்ளி மற்றும் தாமான் கௌாடி தமிழ்ப்பள்ளியின் கட்டுமானப் பணி நடந்து கொண்டிருக்கின்றது.மேலும் ஹீவுட் தமிழ்ப்பள்ளிக்கு அனுமதி கடிதம் வழங்கப்பட்டு விட்டது. அதன் வரிசையில் பண்டார் மக்கோத்தா தமிழ்ப்பள்ளியின் அடிக்கல் நாட்டு விழா சிலாங்கூர் மாநிலத்தில் விமரிசையாக நடை பெறவிருக்கின்றது. மொத்தம் 24 வகுப்பறைகளை யும் மற்ற வசதிகளையும் உள்ளடக்கிய இப்பள்ளிக்கூடம் 21 மில்லியன் ரிங்கிட் செலவில் கட்டப்படவிருக்கின்றது. இப் பள்ளிக்கூடத்தின் அடிக்கல்நாட்டு விழாவை சுகாதார அமைச்சரும் மஇகாவின் தேசிய தலைவருமான மாண்புமிகு டத்தோஸ்ரீ டாக்டர் ச.சுப்ரமணியம் நாளை ஜூன் 30ஆம் தேதி காலை 8.00 மணிக்கு பண்டார் மக்கோத்தா செராசில் அதிகாரப்பூர்வமாக திறந்து வைக்கவுள்ளார் என கல்வி துணை அமைச் சர் டத்தோ ப.கமலநாதன் நேற்று ஓர் அறிக்கை வழி தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்