கோலாலம்பூர், அனைத்துலக, ஆசிய உடற்கட்டழகர் போட்டிகளின் சாம்பியன் பட்டங்களை தற்காப்பேன் என்று தேசிய வீரர் மைக் மகேன் நேற்று கூறினார்.நாட்டின் முன்னணி உடல் கட்டழகர் வீரர்களில் முகமட் ஷாருல் அஸ்மான் மகேன் என்ற மைக் மகேனும் ஒருவராவார். உடல் கட்டழகர் துறையில் தன்னை முழுமையாக ஈடுபடுத்திக் கொண்ட அவர் பல அனைத்துலக போட்டிகளில் பதக்கம் வென்று நாட்டிற்கு பெருமையை தேடித் தந்துள்ளார். ஆசிய ரீதியிலான உடற்கட்டழகர் போட்டியில் இரண்டு முறை சாம்பியன் பட்டத்தை அவர் வென்றுள்ளார். மூன்று முறை இரண்டாவது இடத்தையும், ஒரு முறை மூன்றாவது இடத்தையும் மைக் மகேன் பெற்றுள்ளார். அனைத்துலக ரீதியிலான போட்டியில் இரண்டு முறை இரண்டா வது இடத்தையும், 3 முறை மூன்றாவது இடத்தையும் வென்றுள்ளார். அதே வேளையில் 2016ஆம் ஆண்டுக் கான போட்டி பட்டாயா நகரில் நடைபெற்றது. இதில் களமிறங்கிய மைக் மகேன் தங்கம் வென்றதுடன் ஒட்டு மொத்த சாம்பியன் பட்டத்தையும் தட்டிச் சென்றார். உடற்கட்டழகர் போட் டியில் அனைத்துலக ரீதியில் சாம்பியன் பட்டம் வென்று நாட்டிற்கு பெரு மையை மைக் மகேன் தேடித் தந்துள்ளார். அவரின் வெற்றிகளை அங்கீகரிக்கும் வகையில் 2016ஆம் ஆண்டு தேசிய சிறந்த விளையாட்டு வீரருக்கான விருது அவருக்கு வழங்கப்பட்டது. இவ்வேளையில் ஆசிய உடற்கட்டழகர் போட்டி வரும் ஆகஸ்ட் மாதம் தென் கொரியாவில் நடைபெறவுள்ளது. அதே வேளையில் அனைத்துலக உடற்கட்டழகர் போட்டி அக்டோபர் மாதம் மங்கோ லியாவில் நடைபெற வுள்ளது. இவ்விரு போட்டிகளுக்கும் தயாராகி வரும் முகமட் ஷாருல் அஸ்மான் செய்தியாளர்களிடம் பேசினார். உடற்கட்டழகர் துறையில் அனைத்துலக, ஆசிய போட்டிகளில் முதல் நிலையில் பெற்ற வெற்றி தான் மிகப் பெரிய சாதனையாக உள்ளது. இச் சாதனைகளை தற்காக்க வேண்டும் என்பது என்னுடைய முதன்மை நோக்கமாக உள்ளது. இவ்விரு பட்டங்களையும் தற்காக்கும் வகையில் கடுமையான பயிற்சிகளை மேற்கொண்டு வருகிறேன். முதல் கட்டமாக ஆசிய போட்டியில் வெற்றியை நிலைநாட்ட வேண்டும். எனக்கு சவால் விடுக்கும் பல வீரர்கள் இத்துறையில் உருவாகி விட்டனர். ஆகவே அவர்களின் சவால்களை முறியடித்து வெற்றியை பெறுவேன் என்ற நம்பிக்கை தமக்குள்ளதாக மைக் மகேன் கூறினார். இதனிடையே தேசிய வீரர் ஷசாலி சமாட்டிற்கு பின் உடற்கட்டழகர் பிரிவில் மலேசியாவின் பெயரை ஆசிய, அனைத்துலக ரீதியில் கொண்டு சென்றவர் மைக் மகேன் என் பதும் குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்