ஈப்போ, இவ்வாண்டின் முதல் ஆறு மாதங்களில், குண்டர் கும்பல் நடவடிக்கைகளில் சம்பந்தப்பட்ட தாக சந்தேகிக்கப்படும் 105 பேரை பேரா போலீசார் கைது செய்துள்ளனர். அவர்களில் 40 பேர் கேங் 04 கும்பலையும் 32 பேர் கேங் 08யும் 23 பேர் கேங் 360யும் அறுவர் கேங் 24யும் இருவர் கேங் 36யும் மேலும் இருவர் கேங் 21யும் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படுவதாக மாநில குற்றப் புலனாய்வுத் துறை தலைவர் கான் தி யான் கீ கூறினார். மொத்தம் 66 புலன் விசாரணை அறிக்கைகள் தாக்கல் செய்யப்பட் டன. இதனை தொடர்ந்து அறுவர் மீது நீதிமன்றத்தில் குற்றஞ்சாட்டப்பட்டது. அதே வேளையில் 14 சந்தேகப் பேர்வழிகள் அடுத்த கட்ட நடவடிக்கைக்கு உட்படுத்தப்படவில்லை என்று அவர் ஓர் அறிக்கையில் குறிப்பிட்டார். கேங் 360 என அழைக்கப்படும் ஒரு புதிய குண்டர் கும்பல் பேராவில் உருவாகி இருக்கிறது. இந்த கும்பலைச் சேர்ந்தவர்கள் என சந்தேகிக்கப்படும் ஒரு பெண் உட்பட 23 பேர் இரண்டு நாட்களுக்கு முன்னர் சுங்கைசிப் புட்டில் கைது செய்யப் பட்டனர் என்று அவர் மேலும் கூறினார். சுங்கைசிப்புட், தாமான் லிந்தாங் மக்மோர், பெர்சியாரான் லிந்தாங் மக்மோர் 9இல் கடந்த ஞாயிற்றுக்கிழமை மேற்கொள்ளப்பட்ட ஓப்ஸ் சந்தாஸ் நட வடிக்கையின் போது ஒரு பெண் உட்பட 23 உள்ளூர் வாசிகள் குண்டர் கும்பலில் சம்பந்தப்பட்டவர்கள் என்ற சந்தேகத்தின் பேரில் போலீசாரால் கைது செய்யப்பட்டனர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்