பெட்டாலிங் ஜெயா, ஜூன் 29- நோன்புப் பெருநாளை முன்னிட்டு பொதுமக்களுக்கு விருந்து உபசரிப்பை நடத்திய பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக், தனது குடும்பத்தினர் உள்ளிட்ட இதர 23 பேருடன் தற்போது இந்தோனேசியாவின் சுற்றுலா தீவான பாலியில் விடுமுறைக்கு சென்றுள்ளார். மொத்தம் 24 பேரடங்கிய சுற்றுலா குழுவினருடன் விமானம் கடந்த திங்கட்கிழமை பிற்பகலில் டென்பாசார் அனைத்துலக விமான நிலையத்தில் தரை யிறங்கியதாக ஜாகர்த்தா போஸ்ட் தகவல் வெளியிட்டுள்ளது. ஐந்து நட்சத்திர ஹோட்டல்கள் அமைந்துள்ள, நூசா டுவாவில் உள்ள செயிண்ட் ரெகிஸ் சுற்றுலா தலத்தில் அவர்கள் தங்கியிருப்பர் என்று அது தெரிவித்தது. கடந்த மார்ச் மாதம், சவூதி அரேபியாவின் மன்னர் சல்மான் அப்துல் அஜிஸ் தனது 1,500 சுற்றுப்பயணக் குழுவினருடன் இதே ஹோட்டலில் தங்கி யிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. பாலி கவர்னர் மேட் மங்கு பாஸ்திக்கா, ராணுவ தளபதி மேஜர் ஜெனரல் கொமாருடின் சிமாஞ்சுதாக், போலீஸ் தலைவர் ஜெனரல் பெட் ருஸ் ஆர்.கொலோஸ் ஆகியோர் விமான நிலையத்தில் நஜீப்பை வரவேற்றதாக அந்நாளிதழ் கூறியது. நஜீப்பும் அவரின் குடும் பத்தினரும் நாளை வெள்ளிக்கிழமை ஆஸ்திரேலியா, பெர்த் புறப் படுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. விமான நிலையம் வந்த டைந்த அவர்களை மெர்சிடிஸ் பென்ஸ், டொயோட்டா கெம்ரி, டொயோட்டா கிஜாங் இனோவா, டொயோட்டா ஹைஏஸ் ஆகி யன அடங்கிய 11 வாகனங்களில் ஹோட்டலுக்கு அழைத்துச் செல்லப்பட்டனர் என்று மெட்ரோ டிவி அறிவித்தது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்