பிரதானமாக வேறு தொழில் ஓடும். இந்தச் சூழலை மாற்றும் வகையில் கல்வித்துறை, தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தி ஒரு தடாலடி நடவடிக்கையை எடுத்திருக்கிறது. அதுதான் பயோ மெட்ரிக் வருகைப் பதிவேடு. கார்பரேட் நிறுவனங்களில் பயன்படுத்தப்படும் இந்த வருகைப் பதிவேட்டுத் திட்டம் பரிட்சார்த்த அடிப்படையில் பெரம்பலூர் மாவட்டத்தில் செயல்படுத்தப்பட்டது. இத்திட்டம் நல்ல விளைவை ஏற்படுத்தியதை அடுத்து, தமிழகம் முழுவதும் இத்திட்டத்தை விரிவுபடுத்த உள்ளது கல்வித்துறை. அரசுப்பணிகள் அனைத்தையும் மின் ஆளுகை மயப்படுத்தும் பணிகள் நடந்து வருகின்றன. பெரம்பலூர் மாவட்டத்தில் அத்திட்டம் முழு வீச்சில் நடந்து வருகிறது. அத்திட்டத்தின் ஒரு பகுதியாகக் கடந்த ஜனவரி மாதம், ஆசிரியர்களுக்கான பயோ-மெட்ரிக் வருகைப் பதிவுத் திட்டம் பள்ளிகளில் தொடங்கப்பட்டது. இதன்படி, மாவட்ட அளவில் மொத்தமுள்ள 85 பள்ளிகளில், முதற்கட்டமாக 50 பள்ளிகளில் மட்டும் பயோ மெட்ரிக் எந்திரம் பொருத்தப்பட்டது. இதற்காக சம்பந்தப்பட்ட பள்ளி கம்ப்யூட்டர் ஆசிரியர்கள், கம்ப்யூட்டர் இயக்குபவர்களுக்குத் தேசியத் தகவல் மைய ஊழியர்கள் பயிற்சி அளித்தனர். இது நல்ல விளைவை ஏற்படுத்தவே, மாணவர்களுக்கும் இத்திட்டம் விரிவுபடுத்தப்பட்டுள்ளது. குரும்பலூர், துங்கபுரம், பேரளி அரசு மேல்நிலைப்பள்ளி, தம்பிரான்பட்டி, முருக்கன்குடி, வரகூர், காடூர், கூடலூர், வடக்குமாதவி அரசு உயர்நிலைப்பள்ளிகளில் முதற்கட்டமாகஇத்திட்டம் தொடங்கப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்