கோலாலம்பூர், அகதிகளுக்கு உதவுவதற்காக தமது 18 ஆவது வயதில் ஓர் அரசுசார்பற்ற அமைப்பைத் தோற்றுவித்த ஹெய்டி குவா விற்கு பிரிட்டிஷ் அரசி எலிசபெத் 2 வழங்கும் இளந்தலைவர்கள் விருது பெறுபவராக அறிவிக்கப் பட்டுள்ளார்.லண்டனுக்கு புறப்படுவதற்கு சில மணி நேரங்களுக்கு முன்பு மலேசியா கினி குவாவை சுபாங் ஜெயாவில் சந்தித்து நேர்காணல் நடத்தியது. அவருடன் இருக்கையில், அவருக்கு வந்த கைத்தொலை பேசி அழைப்புகள் எண்ணற் றவையாக இருந்தன. அதில் ஒன்று, பிரதமர் அலுவலகத் திலிருந்து வந்த அழைப்பு. லண்டனுக்கு புறப்படுவதற்கு முன்பு அவர் பிரதமரைச் சந்திக்க முடியுமா என்று கேட்கப்பட்டார். அழைப்பை ஏற்றுக் கொள்ள முடியாத நிலையை குவா விளக்கினார். காமன்வெல்த் நாடுகளில் சமுதாய நடவடிக்கைகளில் ஈடுபாடு கொண்டு அச்சமுதாய மக்களின் வாழ்க்கையில் மாற்றத் தைக் கொண்டு வரும் இளந் தலைவர்களுக்கு அங்கீகாரம் அளித்து அவர்களைக் கொண்டா டுவது எலிசபெத் அரசியின் இளந்தலைவர்கள் விருது.இவ்வாண்டின் விருதுக்காக தேர்வு செய்யப்பட்ட ஒரே மலேசியரான ஹெய்டி குவா, அகதிகளுக்கான இடர்க்காப் படம் (Refuge for The Refugees (RFTR) என்ற அமைப்பின் வழி ஆற்றிய சேவைக்காக இந்த விருதைப் பெறுகிறார். ஹெய்டி குவாவும் அவரின் தோழி அண்டிரியா பிரிஷாவும் ஐந்தாம் படிவ படிப்பை முடிக்கும் தறுவாயில் இருக்கும் போது ஐந்து ஆண்டுகளுக்கு முன்பு இந்த ஆர்எப்டிஆர் என்ற அரசு சார்பற்ற அமைப்பைத் தொடங்கினர்.அவர்கள் இருவரும் ஒரு மியன்மார் அகதிகளுக்கான பள்ளி யில் ஆங்கிலமொழி போதிக்கும் தன்னார்வல ஆசிரியர்களாக சேர்ந்தனர். மிகக் குறுகிய காலத்தில், நிதி பற்றாக்குறையினால் அப்பள்ளி மூடப்படும் நிலையை எட்டியது. தாம் மேல்படிப்பற்குச் செல்லப் போகும் நிலையில் இருக்கும் போது, மலேசியாவில் முறையான கல்வி கற்க தகுதி பெறாத இந்தக் குழந்தைகள், தங்களுக்குக் கல்வி கற்க கிடைத்த இந்த வாய்ப்பையும் இழக்கப் போகிறார்களே என்று ஹெய்டி வருந்தினார்.பள்ளிக்கூடம் என்று கூறப்படும் அந்த இடம் இரண்டு மலிவு விலை அடுக்கு வீடு களைக் கொண்டதாகும். அவற்றின் அறைகளுக்கு சூரிய ஒளிதான் வெளிச்சம். எப்படியாவது அப்பள்ளியைக் காப்பாற்றி விட வேண்டும் என்ற துடிப்பில், நிதி திரட்டு வதற்கு இரண்டு வாரகால அவகாசம் தரும்படி தலைமையா சிரியரை ஹெய்டி கேட்டுக்கொண்டார்.இறுதியில், அவர்கள் இருவரும் முகநூலை நாடினர். அவர்கள் படித்துக் கொடுக்கும் பிள்ளை களின் கதையைப் பகிர்ந்து கொண்டனர். மக்கள் ஆதரவு கொடுத்தனர். ஒரு வாரத்திற்குள், ஹெய்டி யும் பரிஷாவும் பள்ளிக்கூடத் தைப் பல மாதங்களுக்கு நடத்து வதற்கு போதுமான நிதியைத் திரட்டுவதில் வெற்றி பெற் றனர். இக்காலக்கட்டத்தில், மலே சியாவில் 186 அகதிகளுக்கான பள்ளிக்கூடங்கள் இருப்பதையும் அவற்றுக்குப் போதுமான நிதி மற்றும் ஆதரவு இல்லா திருப்பதையும் அவர்கள் இருவரும் கண்டறிந்தனர். ஹெய்டியும் பரிஷாவும் 18 வயதை அடைவதற்காக சில வாரங்கள் காத்திருந்தனர். ஓர் அமைப்பை பதிவு செய்வதற்கு குறைந்தபட்ச வயது 18 ஆகும். பின்னர், ஆர் எப்டிஆரை பதிவு செய்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்