கோலாலம்பூர், பினாங்கைச் சேர்ந்த 18 வயது மாணவன் நவீன் அண்மையில் சித்ரவதை மரணத்திற்குள்ளான சம்பவம் உள்பட மலேசியர் களை பேரதிர்ச்சிக்கு உள்ளாக்கிய இரு பகடி வதை மரணங்கள் நடந்ததைத் தொடர்ந்து பள்ளிகளில் பகடி வதைக்கு எதிரான சட்டம் கொண்டு வரப்படுவதற்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. பள்ளிகளில் பகடி வதைகளைத் தடுக்க ஆசிரியர்களுக்கு அதிகாரம் அளிப்பதோடு, அதனால் ஆசியர்களுக்கு ஏற்படும் மிரட்டல்கள், பகடிவதையால் பாதிக்கப்பட்ட மாணவர்களுக்கு ஏற்படும் மிரட்டல்கள் தடுப்பதற்கும் இந்த உத்தேசச் சட்டம் அவசியம் என்று மலாக்கா பெற்றோர் கல்வி நடவடிக்கைக் குழு கோரிக்கை விடுத்துள்ளது. பகடி வதைகளில் சம்பந்தப் பட்ட பிரச்சினைக்கு உரிய மாணவர்களைக் கண்டிக்கும் போது, அவர்கள் ஆசிரியர்களின் வாகனங் களைச் சேதப்படுத்துவது, அவர் களின் வீடுகள் மீது கல் லெறிவது, அவர்களின் குழந்தை களை மிரட்டுவது, தொலைபேசி மிரட்டல் தொல்லைகள் ஆகிய பாதிப் புகளுக்கு இலக்காவதால் ஆசிரியர்கள் அவற்றிருந்து பாதுகாக்கப் படவேண்டும் என்று அந்த அமைப்பு வலியுறுத்தியது. பிரிட்டனில் பள்ளிகளில் இத்தகைய பகடி வதைகள் இடம்பெறுவதைத் தடுக்கும் சட்டம் இருப்பதை போல மலேசியாவிலும் சட்டம் கொண்டுவரப் படவேண்டும் என்று ஜசெகவைச் சேர்ந்த நாடாளுமன்ற உறுப்பினர்க ளான கஸ்தூரி பட்டு, ராம்கர்ப் பால் சிங், ஸ்டிபன் சிம் ஆகி யோர் கோரிக்கை விடுத்திருந் தனர் என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்