கோலாலம்பூர், நாடு முழுவதும் மேற்கொள்ளப்படும் போதைப்பொருளுக்கு எதிரான நடவடிக்கைகளில் நைஜீரிய மாணவர்களே அதிகமாக பிடிபடுகின்றனர் என்று புக்கிட் அமான் போலீஸ் துறை தெரிவித்துள்ளது. கடந்த 2015-லிருந்து கைது செய்யப்பட்ட 358 வெளிநாட்டு மாணவர்களில் மூன்றில் ஒரு பகுதியினருக்கும் மேல் நைஜீரிய மாணவர்களாக இருக்கின்றனர் என்று மத்திய போலீஸ் புள்ளி விவரங்கள் காட்டு கின்றன. 2015 ஜனவரி முதல் இவ்வாண்டு மே மாதம் வரை 122 நைஜீரிய மாணவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.மாணவர் விசாவில் நாட்டிற்குள் நுழைந்து, போதைப்பொருள் விநியோகித்து எளிதான முறையில் பணம் சம்பாதிக்கலாம் என்று அம்மாணவர்கள் நினைக்கின்றனர். அவர்களின் வாழ்க்கையை மட்டு மல்ல, மலேசியர்களின் வாழ்க்கையையும் இதன் வழி அவர்கள் சீரழிக்கின்றனர் என்று புக்கிட் அமான் போதைப்பொருள் ஒழிப்புப் பிரிவின் இயக்குநர் டத்தோஸ்ரீ முகமட் மொக்தார் கூறுகிறார். நைஜீரியா, வங்காள தேசம், ஏமன், சூடான், பாகிஸ்தான், லிபியா, சிரியா, ஜோர்டான், பாலஸ்தீன், சவூதி அரேபியா ஆகிய நாடுகளின் மாணவர்கள் இது வரை போதைப்பொருள் குற்றங்களுக்காக கைது செய்யப்பட்டுள்ளவர்களில் அடங்குவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்