img
img

அண்ணா பல்கலைக்கழக தரவரிசைப் பட்டியல் குழப்பங்கள்!
வெள்ளி 29 ஜூலை 2016 12:37:08

img

தமிழ் நாட்டிலுள்ள பொறியியல் கல்லூரிகள் அனைத்தும் புதுடெல்லியிலுள்ள அகில இந்தியத் தொழில்நுட்பக் கல்விக் குழுவின் (All India Council for Technical Education) அனுமதியைப் பெற்று, அண்ணா பல்கலைக்கழகத்துடன் இணைவிப்பு செய்து செயல்பட்டுக் கொண்டிருக்கின்றன. இந்தக் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கு, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வுகளை நடத்தி, மதிப்பெண் சான்றிதழ் மற்றும் பட்டங்களை வழங்கிவருகிறது. இதுபோல், இந்தப் பல்கலைக்கழகத்துடன் இணைவிப்பு செய்யப்பெற்ற அனைத்துப் பொறியியல் கல்லூரிகளிலும் அரசு ஒதுக்கீட்டு இடங்களுக்கு ஒற்றைச்சாளர முறையில் மாணவர் சேர்க்கையையும் இப்பல்கலைக்கழகமே நடத்தி வருகிறது. ஒரு காலகட்டத்தில் தமிழ்நாட்டில் பொறியியல் கல்லூரிகளின் எண்ணிக்கை அதிகரித்துக்கொண்டிருந்த சூழ்நிலையில், மாணவர்களிடையே சிறந்ததொரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்யமுடியாத குழப்பங்கள் நிலவிவந்தது. அதனைத் தொடர்ந்து, அண்ணா பல்கலைக்கழகம் 2006ல் பொறியியல் கல்லூரிகளில் கடைசியாக நடத்தப்பட்ட தேர்வுகளின் தேர்ச்சி முடிவுகளை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. ‘இந்தத் தரவரிசைப் பட்டி யலால், புதிதாகத் தொடங்கப்பட்ட பொறியியல் கல்லூரிகள் தங்கள் கல்லூரிகளில் மாணவர் சேர்க்கை குறைகிறது’ என்று எதிர்ப்பு தெரிவித்தன. அதன் காரணமாக, அதற்கடுத்த ஆண்டு முதல் தரவரிசைப் பட்டியல் வெளியிடுவதை அண்ணா பல்கலைக்கழகம் நிறுத்திக்கொண்டது. இதனைத் தொடர்ந்து 2011ல் +2 முடித்த மாணவர் ஒருவர், ‘தான் படிப்பதற்கேற்ற நல்லதொரு பொறியியல் கல்லூரியைத் தேர்வு செய்திட தரவரிசைப் பட்டியலை வெளியிடவேண்டும்’ என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார். ‘கல்லூரிகள் வழங்கும் வசதிகளை அடிப்படையாகக் கொண்டு, தரவரிசைப் பட்டியல் வெளியிட முடியாவிட்டாலும், தேர்வு முடிவுகளைக் கொண்டாவது தரவரிசைப் பட்டியல் வெளியிட வேண்டும்’ என்றும் அந்த மாணவர் கோரிக்கை விடுத்தார். இதை ஏற்றுக்கொண்ட நீதிமன்றம் அண்ணா பல்கலைக்கழகத்தின் தேர்வு முடிவுகளைக் கொண்டு தரவரிசைப் பட்டியலை வெளியிட உத்தரவிட்டது. இதையடுத்து, அண்ணா பல்கலைக்கழகம் தேர்வில் மாணவர் தேர்ச்சி விகிதத்தைக் கொண்டு தரவரிசைப் பட்டியல் ஒன்றை வெளியிட்டது. பிறகு ஒவ்வோர் ஆண்டும், தரவரிசைப் பட்டியல் வெளியிடாமல் காலம் தாழ்த்துவதும், நீதிமன்றம் உத்தரவிடுவதும் பிறகு பட்டியலை வெளியிடுவதுமான நிலையே இருந்தது. இந்த ஆண்டும்கூட, உயர்நீதிமன்றத்தின் அறிவுறுத்தலுக்குப் பின்புதான் தரவரிசைப் பட்டியல் வெளியிடப்பட்டது.

பின்செல்

மாணவர் செய்திகள்

img
எஸ்.டி.பி.எம். தேர்வு:  தேசிய நிலையில் திவ்யா, புவனேஸ் சாதனை.

அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  எஸ்.அன்னலெட்சுமி, ஆர்.துர்கா  

தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்

மேலும்
img
சிறந்த ஆசிரியர் சேவைக்கான விருது பெற்ற ஆசிரியர்கள்  ஆர்.தமிழ்ச்செல்வி, கே.தனசுந்தரி,

ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த

மேலும்
img
தமிழ்த்துறையில் இதுவரையில் 39 விருதுகளைப் பெற்றுள்ள இலக்கியா

அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்

மேலும்
img
ஏற்ற இறக்க நிலையில் மாணவர் பதிவு

சுங்கை பாப்பான், பாசாக் மற்றும் லாயாங் லாயாங்

மேலும்
  • Copyright 2019.Nanban.All rights reserved.
  • powered by img