ஈப்போ, சித்தியவான், தாமான் நேசாவில் உள்ள ஒரு தமிழ்ப்பள்ளியின் சுவரில் குண்டர் கும்பல் சின்னங்களை வரைந்துள்ள சில தரப்பினரின் பொறுப்பற்ற செயலை கல்வி அமைச்சு கண்டித்துள்ளது. பள்ளிக்கூடம் கல்வி பயில்வதற்கான ஓர் இடம். இப்படி பொது சொத்தை நாசப்படுத்துவது ஒரு குற்றச் செய லாகும் என்று வர்ணித்துள்ள கல்வி துணை அமைச்சர் டத்தோ ப.கமலநாதன், இது குறித்து போலீசில் புகார் செய்யும்படி பள்ளி நிர்வாகத்தை வலி யுறுத்தியுள்ளார். லாடாங் சுங்கை வாங்கி தமிழ்ப்பள்ளியில் இச்சம்பவம் நடந்துள்ளது. இது தொடர்பாக கருத்துரைத்த கமலநாதன், பள்ளியின் தலைமை ஆசிரியரை தொடர்பு கொண்டு விவரங்கள் பெறவிருப்பதாகச் சொன்னார். பள்ளியின் திடலை பயன்படுத்துவதற்கு தடை விதிக்கப்பட்டதால் சில இளைஞர்கள் இத்தகையச் செயலில் ஈடுபட்டதாக அறியப்படுகிறது. பள்ளிக் கூடத்தைச் சுற்றி சுவர் எழுப்பப்படுவதற்கு முன்பு, சுமார் 15 முதல் 30 வயதுடைய இளைஞர்கள் கும்பல் அடிக்கடி இரவில் பள்ளிக்கூட திடலில் ஒன்று கூடி மதுபான விருந்து வைப்பது வழக்கம் என்று பெயர் குறிப்பிட விரும்பாத பள்ளிக்கூட பணியாளர் ஒருவர் கூறினார். இதனிடையே, சம்பவம் குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டு, சுவர் மீது புதிதாக சாயம் பூசப்பட்டுள்ளது என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அப்பகுதியில் குண்டர் கும்பல் நடமாட்டம் பற்றி போலீசுக்கு தெரியும் என பேரா குற்றப்புலன் விசாரணை தலைவர், உதவி ஆணையர் டத்தோ கான் தியென் கீ கூறினார். இப்பகுதிகளில் வாழும் பலர் தங்கள் பாதுகாப்பு குறித்து அச்சம் கொண்டுள்ளனர். தாமான் நேசா, கம்போங் டிராலிக், லாடாங் சுங்கை வாங்கி ஆகிய இடங் களில் குண்டர் கும்பல் நடவடிக்கைகளை போலீஸ் கண்காணித்து வருகிறது என்று அவர் சொன்னார். சம்பந்தப்பட்ட இந்த பகுதிகளில் 04, 08, 24, 36 ஆகிய குண்டர் கும்பல்கள் தீவிரமாக செயல்பட்டு வருவதை அவர் சுட்டிக்காட்டினார். கடந்த சில மாதங் களாக இங்கு பலரையும் தாங்கள் கைது செய்திருப்பதாகவும், அவர்களில் சிலர் 1959-ஆம் ஆண்டு குற்றத்தடுப்புச் சட்டத்தின் கீழ் தடுத்து வைக்கப் பட்டிருப்பதாகவும் அவர் மேலும் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்