கோலாலம்பூர், 1 எம்டிபி நிறுவனத்தின் பணத்தின் மூலம் வாங்கப்பட்டதாக கூறப்படும் மலேசியாவின் பிரபல தொழிலதிபர் ஜோ லோ அன்பளிப்பாக அளித்த 3 கோடியே 50 லட்சம் வெள்ளி மதிப்புள்ள வைர நகைகளை ஆஸ்திரேலியா நாட்டைச் சேர்ந்த மாடல் அழகி மிராண்டா கெர் அமெரிக்காவின் நீதித் துறையிடம் ஒப்படைத்தார். அந்நகைகளை வாங்கியது மூலம் ஜோ லோ 1 எம்டிபி நிறுவனத்தின் நிதியில் மோசடி செய்துள்ளார் என்று கடந்த வாரம் அமெரிக்காவின் நீதித்துறை (டி.ஓ.ஜே) குற்றம் சாட்டியதைத் தொடர்ந்து இந்த நகைகளை அந்த அழகி ஒப்படைத்தார்.கடந்த வெள்ளிக்கிழமை அந்த மாடல் அழகி, அமெரிக்கா, லாஸ் ஏஞ்சல்சில் உள்ள தனது பாதுகாப்பு வைப்பு பெட்டகத்திலிருந்து அந்த வைர நகைகளை ஒப்படைத்ததாக தி வோர்ல்டு ஸ்திரீட் பத்திரிகை செய்தி வெளி யிட்டுள்ளது. அமெரிக்க நீதித்துறையின் விசாரணை தொடங்கப்பட்டபோது, தாம் அதற்கு முழு ஒத்துழைப்பு வழங்குவதாகக் கூறியிருந்த மிராண்டா தம்மிடம் உள்ள நகைகளையும் ஒப்படைப்பதாக உறுதி கூறியிருந்தார். இவ்விவகாரம் குறித்து அமெரிக்காவின் நீதித்துறை கருத்துரைக்க மறுத்துவிட்டதாக அப் பத்திரிகை கூறியது. பினாங்கு வர்த்தகரான ஜோ லோவும் அவரின் சக நண்பர் எரிக் டானும் நகைகளை வாங்குவதற்கு 20 கோடி அமெரிக்க டாலர் பணத்தை செலவழித்ததாக அமெரிக்காவின் நீதித்துறை தனது சிவில் வழக்கில் கூறியிருந்தது.அவர் வாங்கிய நகைகளை அது பட்டியலிடாவிட்டாலும், மிராண்டா கெர்ருக்கும், அவரின் தாய்க்கும் நகைகளை வாங்குவதற்கு ஜோ லோ 99 லட்சம் அமெரிக்க டாலரை செலவழித்துள்ளதாக அமெரிக்காவின் நீதித்துறை குற்றம் சாட்டியது. மலேசிய நாட்டின் முதலாவது தலைவரின் துணைவியாருக்கு நகைகள் வாங்குவதற்கு அவர் 2 கோடியே 86 லட்சம் அமெரிக்க டாலரை செலவழித்துள் ளதாகவும் அத்துறை குற்றம் சாட்டியிருந்தது. கடந்த 2012ஆம் ஆண்டு முதல் அவர் 1 எம்டிபி பணத்திலிருந்து தன் தாய்க்கு வைர மோதிரத்தை வாங்கியதாகவும் அமெரிக்காவின் நீதித்துறை குற்றம் சாட்டியது. இன்னும் அடையாளம் காணப்படாத பெண்ணுக்கு நிச்சயதார்த்த மோதிரத்தை வாங்குவதற்கு அவர் லோரேய்னி ஸவார்ட்ஸ் நிறுவனத்திட மிருந்து 2 கோடியே 84 லட்சம் அமெரிக்க டாலர் நகைகளை வாங்கியதாக வாங்கிய ரசீதில் குறிப்பிடப்பட்டிருந்தது. 1 எம்டிபி நிறுவனத்தின் பணம் மூலம் வாங்கப்பட்ட அனைத்து சொத்துக்களையும் பறிமுதல் செய்யும் வகையில் கடந்த ஆண்டு அமெரிக்காவின் நீதித் துறை முதலாவது சிவில் வழக்கைத் தொடுத்தது.இதனைத் தவிர்த்து லண்டன், நியூயார்க், லாஸ் ஏஞ்சல்ஸ் ஆகிய இடங்களில் வாங்கப்பட்ட சொத்துக் களையும், 25 கோடி அமெரிக்க டாலர் மதிப்புள்ள பாய்மரக் கப்பலையும் பறிமுதல் செய்யும் நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்