பெட்டாலிங் ஜெயா, பெர்த்திலிருந்து கோலாலம்பூர் புறப்பட்ட ஏர் ஆசியா விமானம், நடுவானில் ஏற்பட்ட இயந்திரக் கோளாறு காரணமாக 90 நிமிடங்களுக்குப் பிறகு 359 பயணிகளுடன் மீண்டும் பெர்த் விமான நிலையத்தில் தரையிறக்கப்பட்டது.சலவை இயந்திரத்தைப் போல விமானம் குலுங்கியது என்று ஒரு பயணி தெரிவித்த வேளையில், விமானத்தின் இரட்டை இயந்திரங்கள் ஒன்றின் கத்தி உடைந்ததில் ஒற்றை இயந்திரத்தின் உதவியுடன் விமானம் தரையிறங் கியது என்ற அதிர்ச்சித் தரும் தகவலை ஆஸ்திரேலிய நாளேடு ஒன்று வெளியிட்டது. ஞாயிற்றுக்கிழமை காலையில் 7.00 மணிக்கு ஏர் ஆசியா டி7237 ரக விமானம் பெர்த்திலிருந்து கோலாலம்பூர் புறப்பட்டது. அதன் பயணத்தில் 90 நிமிடங்களுக்கு பிறகு இயந்திரத்தில் வெடிக்கும் சத்தம் கேட்டதை தொடர்ந்து விமானத்தில் கடுமையான அதிர்வுகள் ஏற்பட்டன. என்ன செய்வதென்று தெரியாத நிலையில் பயணிகள் சிலர் மரண பீதியில் ஆழ்ந்திருக்க, இன்னும் சிலர் சம்பவம் குறித்து சமூக வலைத்தளத்தில் பதிவு செய்யும் செயலில் ஈடுபட்டிருந்தனர். இந்த நிலையில் விமானியிடமிருந்து வந்த தகவல் மேலும் திகிலை ஏற்படுத்தியது. பயணிகள் கவனத்திற்கு, நீங்கள் அளிக்கும் ஒத்துழைப்பில்தான் நமது பாதுகாப்பும், உயிர் பிழைத்தலும் இருக்கிறது. கடவுளை வேண்டிக்கொள்ளுங்கள் என்று விமானி அறிவித்ததும் ஒன்றும் செய்ய இயலாத நிலை யில் பயணிகள் அனைவரும், குலுங்கிக் கொண்டிருக்கும் விமானத்தில் அவரவர் கடவுளை பிரார்த்தித்தவாறு அமர்ந்திருந்தனர். பிறகு, விமானம் மீண்டும் பெர்த்திற்கு திருப்பி விடப்பட்டு, பாதுகாப்புடன் தரையிறக்கப்பட்டது. எனினும், இந்த பீதியிலிருந்து விடுபட பயணிகளுக்கு வெகு நேரம் பிடித்தது.ஏர் ஆசியாவை பொறுத்த வரையில், பயணிகளை பீதியில் ஆழ்த்திய இரண்டாவது சம்பவம் இதுவாகும். இம்மாத தொடக்கத்தில் ஏர்பஸ் ஏ330 ரக விமானத்தில் ஏற்பட்ட கோளாறின் காரணமாக மீண்டும் சிட்னியில் தரையிறக்கப்பட்டது. மூன்று ஆண்டுகளுக்கு முன்பு, ஏர் ஆசியா விமானம் ஒன்று இயந்திரக் கோளாறு காரணமாக ஜாவா கடலில் விழுந்து நொறுங்கியது. அதில் பயணித்த அனைத்து பயணிகளும் மரணமடைந்தனர்.இதனிடையே, விமான பராமரிப்பு பணிகளை தாங்கள் முறையாக மேற்கொண்டு வருவதாக ஏர் ஆசியா நேற்று அறிக்கை வழி தெரிவித்தது. ஆஸ்திரேலியா உட்பட தாங்கள் செயல்படும் நாடுகளில் அந்தந்த விதிமுறைகளுக்கு ஏற்பவே தாங்கள் பாதுகாப்பு அம்சங்களை கடைபிடித்து வருவதாக அது குறிப்பிட்டது. கடந்த ஞாயிற்றுக்கிழமை நிகழ்ந்த விமான தொழில்நுட்ப கோளாறுக்கான காரணத்தை ஏர் ஆசியா ஆராய வேண்டும் என்று போக்குவரத்து துணை அமைச்சர் அஜிஸ் கப்ரவி கூறியிருந்தது தொடர்பில் ஏர் ஆசியா இந்த விளக்கத்தை அளித்துள்ளது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்