கோலாலம்பூர், மருத்துவமனைகளில் அனுமதிக்கப்பட்டிருக்கும் வசதி குறைந்த நோயாளிகளுக்கு மலேசிய வசதி குறைந்தோர் நோயாளிகளுக்கு உதவும் சங்கத்தின் ஆதரவில் பல்வேறு உதவிகள் வழங்கப்பட்டு வருகின்றன. அவ்வகையில் தலைநகர் அம்பாங் ஓராங் அஸ்லி மருத்துவ மனையில் அனுமதிக்கப்பட்டி ருக்கும் நோயாளிகளுக்கு அச்சங் கம் சக்கர நாற்காலி வழங்கியது. டாக்டர் லோகேஸ்வரி முயற்சி யில் மேற்கொள்ளப்பட்ட சமூக நல திட்டத்தின் வழி வசதி குறைந்த நோயாளிகள் அடையாளம் காணப்பட்டனர். இதன் வழி டத்தோஸ்ரீ டாக்டர் ஃபைசாலியா தலைமையில் 5 நோயாளிகளுக்கு சக்கர நாற் காலிகள் வழங்கப்பட்டன. இதற்கிடையே இச்சங்கம் தொடங்கப்பட்டது முதல் நோய்களால் பாதிக் கப்பட்டு வசதி குறைவால் எந்தவொரு சிகிச்சையும் செய்ய முடியாமல் தவிக்கும் மக்களுக்கு பல வகையில் உதவிகளை செய்து வருவதாகவும் டாக்டர் லோகேஸ்வரி தெரிவித்தார். விபத்துகளில் கை, கால்களை இழந்தவர்கள் செயற்கை கை, கால்கள், காது கேளாதவர்களுக்கு காது கேட்க உதவும் உப கரணங்கள், சாயும் தன்மை கொண்ட மெத்தை, சளி போன்றவற்றை உறிஞ்சும் குழாய், ஆஸ்துமா பிரச்சினை எதிர்நோக்கியிருப்பவர்களுக்கு ஆக்சிஜன் கான்சென்ட்ரெட்டர் உட்பட பல பொருட்களை சங்கம் வழங்கி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்