ஒரு பாடமாக மட்டுமே திருக்குறளை நடத்திவிட்டு கடந்து சென்றுவிடுகிறார்கள் ஆசிரியர்கள். மாணவர்களின் மனதில் பதியும் வகையில் எளிமையாகவும், ஈர்க்கும் வகையிலும் திருக்குறளைக் கற்றுக்கொடுக்க ஆசிரியர்களுக்குப் பயிற்சியுமில்லை. பக்குவமுமில்லை. ‘தேர்வில் எழுதினோமா, மதிப்பெண் எடுத்தோமா’ என்ற அளவில்தான் மாணவர்கள் திருக்குறளை மதிக்கிறார்கள். இச்சூழலில், கரூர் மாவட்டம், கடவூரில் வசிக்கும் ஓய்வு பெற்ற தலைமையாசிரியர் சுந்தர மகாலிங்கம், திருக்குறளை இசையாகவும், நாடகமாகவும் வடிவம் மாற்றி, தமிழகமெங்கும் பயணித்து மாணவர்களுக்குப் போதித்து வருகிறார். ‘வாழ்க்கைக்கான அத்தனை நன்னெறிகளையும் ஈரடிகளில் உள்ளடக்கிய திருக்குறளை, பள்ளிகளில் தனிப் பாடமாகவே வைக்க வேண்டும்’ என்று உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ள நிலையில் சுந்தர மகாலிங்கத்தின் பணி மிகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது. கரூர் அரசுத் தொடக்கப்பள்ளி மாணவர்கள் மத்தியில் திருக்குறள் போதிக்கக் கிளம்பிய வருடன் நாமும் கிளம்பினோம். காலில் சலங்கை, கண்கவர் உடை, அழகு அணிகலன்கள் என அரிதாரம் பூசி களத்தில் இறங்கிய சுந்தர மகாலிங்கத்தை மாணவர்கள் உற்சாகக் குரல் எழுப்பி வரவேற்றார்கள். ‘திருக்குறளை யாரும் மனப்பாடம் செய்யக்கூடாது. அப்படிச் செய்தால் சீக்கிரம் மறந்துடுவீங்க. திருக்குறள் வெறும் செய்யுள் மட்டுமில்லை. அதுக்குள்ள வாழ்க்கைக்குத் தேவையான அத்தனை வழிமுறைகளும் இருக்கு... இப்போ திருக்குறள்ல சில விளையாட்டுகளை விளையாடப் போறோம்..’ என்றவுடன் மாணவர்கள் மேலும் உற்சாகமானார்கள்.
தமிழ்ப்பள்ளியில் தனக்குள் விதைக்கப்பட்ட தன்னம்பிக்கையே இன்றைய
மேலும்பிடி 3 தேர்வில் பேராவில் இந்திய மாணவர்கள் பலர் சிறந்த புள்ளிகளை பெற்று
மேலும்பத்தாங் பெர்ஜுந்தை தமிழ்ப்பள்ளி உருவாக்கிய வர்த்தகர் - வீரமணி பெருமாள்
மேலும்டெக் டெரெய்ன் கல்லூரி தனது 10ஆவது பட்டமளிப்பு விழாவில் பட்டம் பெற்ற
மேலும்தமிழ்ப்பள்ளியே நமது தேர்வு.
மேலும்