மலாக்கா, வேகக் கட்டுப்பாட்டை இழந்த மைவி கார் சாலை தடுப்புகளில் மோதியதில் 4 இராணுவ வீரர்கள் அதிர்ஷ்ட வசமாக உயிர் தப்பினர். நேற்று காலை 9.45 மணியளவில் மலாக்கா அலோர் காஜா நெடுஞ்சாலையில் இச்சம்பவம் நிகழ்ந்தது. விபத்துக்குள்ளான நான்கு ஆடவர்களும் 20 வயதுக்குட் பட்டவர்கள் என்றும் சுங்கை ஊடாங்கிலுள்ள இராணுவ பயிற்சி முகாமின் மாணவர்கள் என்றும் கண்டறியப்பட்டது. மேலும் பெருநாளுக்காக வீடு திரும்பிக் கொண்டிருந்த வேளையில் இவ்விபத்து நிகழ்ந்ததாக நம்பப்படுகிறது. சம்பவம் நிகழ்ந்த இடத்தை சுமார் காலை 10.10 மணியளவில் சென்றடைந்த போது விபத்துக்குள்ளான மைவி காரில் 4 ஆடவர்கள் சிக்கிக் கொண் டிருந்ததாக ஜாலான் குபு தீயணைப்பு மற்றும் மீட்புக் குழு நடவடிக்கை பிரிவின் கமாண்டர் கைருடின் அட்னான் தெரிவித்தார். சுயநினைவின்றி இருந்த ஓட்டுநருக்கும் மற்ற மூவரும் கடுமையான காயங்களுக்குள்ளாகினர். காரில் சிக்கியிருந்த ஆடவர்கள் மீட்டெடுக்கப்பட்டு மலாக்கா மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்