குவாந்தான், வன்செயல் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களும் நாடகங்களும் பரவலாக மக்களை சென்றடைவதும், பள்ளி மாணவர்கள் மத்தியில் பகடிவதை செயல்கள் அதிகரித்து வருவதற்கான காரணங்களில் ஒன்றாக அடையாளம் காணப் பட்டிருக்கிறது. இன்றைய இளம் வயதினர் இம்மாதிரியான திரைப்படங் களையே விரும்புகிறார்கள். எனவே, திரைப்பட தணிக்கை அடிப்படையில் மேலும் கடுமை யான விதிகள் அறிமுகப்படுத்தப் பட வேண்டும் என்று மலேசிய குற்றத் தடுப்பு அற நிறுவனத்தின் (எம்சிபிஎப்) உதவித் தலைவர் டான்ஸ்ரீ லீ லாம் தை கூறினார். இன்றைய இளம் வயதினர் வன்செயல் காட்சிகளைக் கொண்ட திரைப்படங்களைப் பார்க்கும் பழக்கம் அதிகரித்து வருகிறது. இம்மாதிரியான காட் சிகளால் அவர்கள் மிக எளிதாக கவரப்படுகிறார்கள். திரைப்படங்களில் காண்பிக்கப் படும் வன்செயல்களே பிரச்சினைகளுக்கு தீர்வு காண்பதற்கான ஒரு வழி என அவர்கள் கருது கிறார்கள் என்று அவர் குறிப்பிட்டார். குவாந்தானில் உள்ள பகாங் போலீஸ் தலைமையகத்தில் மாநில போலீஸ் தலைவர் ரோஸ்லி அப்துல் ரஹ்மானை நேற்று முன்தினம் திங்கட் கிழமை சந்தித்த பின்னர் லீ செய்தியாளர்களிடம் இந்த கருத்தை வெளியிட்டார். திரைப்பட தணிக்கை முறை அமலில் இருந்த போதிலும், இளம் பருவத்தினர் கள்ள டிவிடிகள் அல்லது இணையத் தளத்திடல் திரைப்படங்களை பதிவிறக்கம் செய்வது போன்ற மாற்று வழிகளின் மூலம் திரைப்படங்களைப் பார்ப் பதாக அவர் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்