ஜார்ஜ்டவுன், பகடிவதைக்கு ஆளாகி மரணமடைந்த டி.நவீனின் குடும்பத்திற்கு மாதாந்திர பென்ஷன் வழங்கும் ஏற்பாடுகளை சொக்சோ செய்துள்ளது. மேலும், நல் லடக்கச் சடங்கிற்கான கட்டணமாக வெ.2,000-க்கான காசோலை நேற்று வழங்கப்பட்டது. பினாங்கு சொக்சோ இயக்குநர் ஏ.அந்தோணி அருள் தாஸ், குளு கோர் தாமான் துன் சார்டோனில் உள்ள நவீனின் வீட்டிற்குச் சென்று அக்காசோலையை நவீனின் தாயார் டி.சாந்தியிடம் வழங்கினார். மாதாந்திர பென்ஷன் தொகையாக 672 வெள்ளி அக்குடும்பத்திற்கு வழங்கப்படும் என்றும் தாஸ் கூறினார். கடந்த ஜூன் 10-ஆம் தேதி அதிகாலை 2.10 மணிக்கு நிகழ்ந்த சம்பவத்தில் நவீன் மிகவும் கொடூரமான முறையில் தாக்கப்பட்டு ஜூன் 15-ஆம் தேதி மரணமடைந்தார். அவரின் நண்பர் டி.பிரவீன் காய மடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்றார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்