கோலாலம்பூர், தலைநகர், ஜாலான் கூச்சாய் லாமாவில் உள்ள ஒரு நகைக் கடையில் நேற்று காலையில் கொள்ளையர்கள் 60 விநாடிகளில் வெ.25 லட்சம் மதிப்புள்ள ஆபர ணங்களுடன் தப்பிச் சென்றனர். நேற்று காலை 11.30 மணிக்கு அந் நகைக்கடையின் பாதுகாவலர் இச்சம்பவம் குறித்து போலீசுக்கு தகவல் தெரிவித்ததாக மாநகர் குற்றப்புலன் விசாரணை தலைவர், மூத்த உதவி ஆணையர் ருஸ்டி முகமட் இசா கூறினார். அப்பாதுகாவலரும், மேலும் மூன்று பணியாளர்களும் கடையில் இருந்தபோது தலைக்கவசம் அணிந்திருந்த நான்கு ஆடவர்கள் திடீரென உள்ளே நுழைந்து சுத்தியல்களால் காட்சிப் பேழை கண்ணாடிகளை உடைத்து, நகைகளை அபகரித்துச் சென்றனர் என அவர் விவரித்தார். ஒரு நிமிட நேரத்திற்குள் இச்சம்பவம் நடந்து முடிந்தது. அச்சந்தேகப் பேர்வழிகள் துப்பாக்கிகள் வைத்திருந்த தாக நம்பப்படுகிறது. 15 தட்டுகளில் வைக்கப்பட்டிருந்த நகைகளை அவர்கள் அபகரித்தனர். கடையின் நான்கு பணியாளர்களைத் தவிர வேறு வாடிக்கையாளர்கள் யாரும் சம்பவத்தின் போது அங்கில்லை என்பதையும் ருஸ்டி கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்