பெட்டாலிங்ஜெயா, வரும் பொதுத் தேர்தலில் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி வெற்றி பெறுமானால் யார் வேண்டுமானாலும் பிரதமர் ஆகலாம் என்று எதிர்க்கட்சித் தலை வர் டத்தோஸ்ரீ வான் அஜிஸா வான் இஸ்மாயில் நேற்று தெரிவித்தார். எனினும் பக்காத்தான் ஹராப்பான் கூட்டணியை பொறுத்தவரையில் தற் போதைக்கு 14 ஆவது பொதுத் தேர்தலில் மட்டும் கவனம் செலுத்துவது என முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில் பிரதமர் யார் என்பது குறித்து பேசுவதற்கு முன்பு நாங்கள் கண்டிப்பாக வெற்றி பெற்றே ஆக வேண்டும் என்று இங்கு பி.கே.ஆர். தலை மையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் அவர் இதனை தெரிவித்தார். பக்காத்தான் ஹராப்பான் சார்பாக யார் பிரதமராக வருவார் என்று கேட்டதற்கு பிரதமராக யார் வேண்டுமானாலும் வர முடியும். ஏன் நீங்கள்கூட (நிருபர்களை நோக்கி) வர முடியும் என்று வான் அஜிஸா பதில் அளித் தார். இந்த செய்தியாளர்கள் கூட்டத்தில் பேசிய அமானா கட்சியின் தகவல் பிரிவுத் தலைவர் காலிட் சமாட் கூறுகையில் புத்ராஜெயாவை கைப்பற்றுவதற்கு பக்காத்தான் ஹராப்பான் கூட்டணி முழு கவனம் செலுத்த வேண்டும் என்று அன்வார் கேட்டுக்கொண்டு இருப்பதாக குறிப்பிட்டார். இதன் காரணமாகவே அன்வார் பிரதமர் வேட்பாளர் முன்னெடுப்பை கைவிட்டார் என்று காலிட் சமாட் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்