கோலாலம்பூர், விரைவில் அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படும் 14 ஆவது பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி தோல்வி கண்டால் நாட்டில் அவசரகாலம் பிர கடனம் செய்யப்படும் சாத்தியத்தை முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மறுக்கவில்லை. வரும் பொதுத் தேர்தலில் தேசிய முன்னணி குறுகிய தோல்வியைக் காணும் பட்சத்தில் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிக்கப்படும் சாத்தியமும் இருப்பதாக அவர் குறிப்பிட்டார். எனினும் தேர்தல் முடிவு செல்லாது என்று அறிவிப்பதற்கு போதுமான ஆதாரங்கள் இல்லாமல் இருக்குமானால் தேசிய முன்னணியில் உள்ள சில முரடர்கள் நாட்டின் நிலைத்தன்மையை சீர்குலைக்க முற்படலாம் என்றும் துன் மகாதீர் குற்றஞ்சாட்டினார். நாட்டின் நிலைத்தன்மை சீர்குலையும் பட் சத்தில் அவசரகாலம் பிரகடனப்படுத்தப்பட்டு, நாடாளுமன்றம் இடைநீக்கம் செய்யப்படலாம் என்று பார்ட்டி பிரிபூமி பெர்சத்து கட்சியின் தலைவருமான துன் மகாதீர் தனது வலைப்பதிவில் இதனைத் தெரிவித்தார். அப்படி நாடாளுமன்றம் நீக்கப்பட்டால், கடந்த 1969 ஆம் ஆண்டில் நாட்டில் ஏற்பட்ட இனக் கலவரங்களுக்குப் பின்னர் அமைக்கப்பட்ட தேசிய நட வடிக்கை மன்றம் (மகேரான்) போன்ற ஒன்று அமைக்கப்பட்டு இராணுவ ஆட்சிமுறை நடக்கும். நாட்டில் நிச்சயமற்ற நிலை நிலவும் அந்நேரத்தில், தேசிய முன்னணி மற்ற கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை தன் பக்கமாக இழுக்கப் பார்க்கும் என்று மகாதீர் தெரிவித்தார். எனினும் எதிர்க்கட்சிகளின் நாடாளுமன்ற உறுப்பினர்களை விலைக்கு வாங்குவதற்கு தேசிய முன்னணிக்கு எவ்வளவு காலம் பிடிக்கும் என்று உறுதி யாகத் தெரியவில்லை. ஆனால், நாடாளுமன்றத்தை அமைப்பதற்கு போதுமான பெரும்பான்மை வந்ததும் அவசரகாலம் அகற்றப்பட்டு தேசிய முன் னணி பெரும்பான்மை அரசாங்கத்தை அமைக்கும். நாடாளுமன்றம் மீண்டும் செயல்படத் தொடங்கும் என்று துன் மகாதீர் தெரிவித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்