சுங்கை சிப்புட், நாட்டின் மூத்த தமிழ் எழுத்தாளரும் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தின் முன்னாள் பணியாளருமான சங்கநதி எழுத்தாளர் பூ.அருணாசலம் நேற்று மாலையில் காலமானார். அவருக்கு வயது 80. அவர் இறக்கும்போது வீட்டில் அவரின் மகன் ஒருவர் மட்டுமே இருந்துள்ளார். காலஞ்சென்ற பூ. அருணாசலத்திற்கு மூன்று ஆண் பிள்ளைகளும் இரண்டு பெண் பிள்ளைகளும் உள்ளனர். மஇகாவின் ஐந்தாவது தேசியத் தலைவரும் கூட்டுறவு தந்தையுமான மறைந்த துன் வீ.தி. சம்பந்தனுடன் நெருக்கமாக இருந்தவரான பூ. அருணாசலம் தொடக்கத்தில் சங்க நதி எனப்படும் சுங்கை சிப்புட்டில் களப்பிரிவு அதிகாரியாகவும் பின்னர் கோலாலம்பூரில் தேசிய நில நிதி கூட்டுறவு சங்கத்தில் பணியாளராகவும் பணியாற்றி ஓய்வு பெற்றவர் ஆவர். துன் சம்பந்தனைப் போல் வேஷ்டியை அணியும் பாரம்பரியத்தை தனது வாழ்நாளில் இறுதி மூச்சு வரை கொண்டிருந்தார். துன் வீ.தி. சம்பந்தனுக்கு பிறந்த நாள் விழாவை ஒவ்வொரு நாளும் இவர் சிறப்பாக முன்னெடுத்து சுங்கை சிப்புட்டில் நடத்தி வந்துள்ளார். கடந்த 18-6-2017 அன்று சுங்கை சிப்புட்டிலுள்ள அருள்மிகு சுப்பிரமணியர் சுவாமி திருக்கோவில் உள்ள கல்யாண மண்டபத்தில் துன் சம்பந்தனின் 98 ஆவது பிறந்த நாள் கொண்டாடத்தை துன் சம்பந்தனின் புதல்வி தேவகுஞ்சரி தலைமையில் வெற்றிகரமாக நடத்தினார். ஒவ்வொரு வருடமும் துன் சம்பந்தனின் பிறந்த நாள், இறந்த நாள் அன்று அனைத்து தமிழ் நாளிதழ்களிலும் துன் சம்பந்தனின் சேவையை போற்றும் கட்டுரைகளை துன் சம்பந்தன் மறைந்த 1979 முதல் கடந்த 38 ஆண்டு காலமாக எழுதி வந்துள்ளார். மலேசிய தமிழ் எழுத்தாளர் சங்கத்தின் மூத்த உறுப்பினராகவும் முன்னாள் பொருளாளராகவும் இருந்து வந்துள்ளார். பத்திரிகையாளர்களுடன் நல்லதொரு நட்பு கொண்டிருந்த சிறந்த பண்பாளராகவும் அவர் விளங்கியுள்ளார். தமிழுக்கு தொண்டாற்றி மறையும் எழுத்தாளர்கள் குறித்து ஆழ்ந்த வருத்தம் தெரிவித்து அவர்களின் சிறப்புகளை பத்திரிகை களில் எழுதுவதை மறைந்த பூ. அருணாசலம் வழக்கமாக கொண்டிருந்தார். ஆக கடைசியாக அவர் கடந்த ஜூன் 15 ஆம் தேதி வியாழக்கிழமை மைதீ.சுல்தான் மறைவு குறித்து தனது இரங்கல் செய்தியை தெரிவித்து இருந்தார். அவரின் நல்லக்க இறுதிச்சடங்கு அவர் பிறந்த மண்ணான சங்கநதி சுங்கை சிப்புட்டில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறுகிறது.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்