கோலாலம்பூர், பள்ளிக்குச் சென்று கல்வி கற்க வேண்டிய வயதில், பள்ளிக்கு மட்டம் போட்டுவிட்டு, பள்ளி சீருடையில் போதையில் தள்ளாடிக் கொண்டு சக பள்ளி தோழர்களுடன் தகாத வார்த்தைகளில் வசைமொழி பொழிந்துகொண்டு ஆட்டம் போடும் காணொளி காட்சி ஒன்று தற்போது சமூக வலைத் தளங்களில் பரவி வருவது இந்திய சமூகத்தின் மத்தியில் வெறுப்பையும் பயத்தையும் கவலையையும் ஏற்படுத்தியுள்ளது. நமது இந்திய மாணவ சமுதாயம் எதை நோக்கி சென்று கொண்டிருக்கிறது என்ற கேள்வியை அந்த காட்சியை பார்க்கும் ஒவ்வொருவரும் தங்களையே கேட்டுக்கொள்கின்றனர். நிற்கக்கூட சக்தியில்லாமல் போதையில் தள்ளாடும் ஒரு மாணவனை குத்தாட்டம் போடச்சொல்லி, அவனை பகடிவதை செய் யும் சக மாணவர்கள், சரமாரியாக ஆபாச வார்த்தையை பயன்படுத்துவது, நமது மாணவர்கள் சீரழியும் கலாச்சாரத்தை நோக்கி சென்று கொண்டி ருக்கி றார்களா என்ற கேள்வியையும் முன்னெடுக்க வைக்கிறது. எந்த இடம் என்று தெரியவில்லை. ஆனால், ஒரு மலைப்பாங்கான பகுதி போல் இருக்கிறது. அருகில் நீர் வீழ்ச்சியிருப்பதை போன்று நீர் சலசலத்து ஓடும் சத்தம் கேட்கிறது. ஒரு கொட்டகைக்கு முன்னால் மாணவர்கள் போதையில் தள்ளாடுகிறார்கள். அவர்கள் நான்கு ஐந்து மாணவர்களாக இருக் கக்கூடும். அவர்களில் நால்வரும் பள்ளி சீருடை அணிந்து இருக்கின்றனர். ஒருவர் டி சட்டை அணிந்து இருக்கிறார். சுமார் 37 வினாடிகள் ஓடக்கூடிய அந்த காணொளியில் தள்ளாடும் மாணவனை தாங்கிப்பிடித்தவாறு ஒரு ஒரு மாணவன், ஆடச் சொல்கிறான். ஆடு.... ஆடு.... டேய் ஆடுடா.... நீ ஆட வேண்டி நேரம் இது... குத்துப்பாட்டுக்கு ஆடு.... ஏய்... கீழே போத்தல் கிடக்குதடா... என்று கூறிய வண்ணம் ஆபாச வார்த்தைகளையும் பயன்படுத்துகின்றனர். இந்த காணொளியை பகிர்ந்து கொண்டவர்கள் இதனை பார்க்கும் போது நெஞ்சம் நிச்சயம் பகீர் என்று அடிக்கவே தோன்றும். அந்த அளவிற்கு மாணவர்கள் மத்தியில் பெரும் சீரழிவை ஏற்படுத்தக்கூடிய செயலாக இது இருக்கிறது. மூன்று தினங்களுக்கு முன்புதான், நெகிரி செம்பிலான், மந்தினில் ஓர் இடைநிலைப்பள்ளியைச் சேர்ந்த இந்திய மாணவர்கள் ஒருவரையொருவர் குத்திக் கொண்டு சண்டையிட்ட காட்சி சமூக வலைத்தளங்களில் பரவலாக பரவி பெரும் அதிர்ச்சியை உண்டு பண்ணியது. இந்திய மாணவர்களிடையே வன் முறை கலாச்சாரத்தை ஊக்குவிக்கக்கூடிய இந்த காட்சியை கண்ட மக்கள் ஆத்திரம் அடைந்ததுடன் கண்டனத்தையும் தெரிவித்தனர். காரணம், ஒரு வாரத்திற்கு முன்பு, பினாங்கில் பகடிவதைக்கு ஆளான 18 வயது டி. நவீன் என்ற மாணவன் கடுமையாக தாக்கப்பட்ட நிலையில் சுய நினைவு திரும்பாமலேயே மாண்ட சம்பவம் மலேசிய மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி அந்த துயரத்திலிருந்து இன்னும் மீளாத நிலையில் திடீ ரென்று மந்தின் இடைநிலைப்பள்ளியில் இந்திய மாணவர்கள் வன்முறையில் ஈடுபட்டு இருப்பது சமூகத்திற்கு பெரும் தலைக்குனிவை உண்டு பண் ணியது. இது நடந்த மூன்று நாட்களுக்குள் மறுபடியும் இந்திய மாணவர்கள் சம்பந்தப்பட்ட போதையில் தள்ளாடும் காட்சி மக்களை பெரும் அச்சத்தில் ஆழ்த்தியுள்ளது. நாடு சென்று கொண்டிருக்கும் வேகத்தில் பிற இனத்து மாணவர்கள் கல்விக்கும் அவர்களின் எதிர்கால லட்சியத்திற்கும் முக்கியத்துவம் கொடுத்து, எதிர் கால நகர்வை நோக்கி சென்று கொண்டிருக்கின்றனர். ஆனால், இந்திய மாணவர்களோ குண்டர்களின் எண்களை பயன்படுத்திக்கொண்டு பள்ளிக்கு வெளியே பட்டாசு வெடித்து கேக் வெட்டி கொண்டாடுவது, சக மாணவர்களை பகடி வதை செய்து நிந்திப்பது, பள்ளிக்கு மட்டம் போட்டு விட்டு போதை யில் தள்ளாடுவது முதலிய செயல்கள் அவர்களின் குடும்பத்திற்கு மட்டுமல்ல சமூகத்திற்கும் நாட்டிற்கும் அவமானத்தையும் பெரும் இகழ்வையும் உண்டு பண்ணுகிறார்கள். தங்களின் எதிர்கால வாழ்க்கையையே சீரழியும் கலாச்சாரமாக்கிக்கொண்ட இவர்கள் இந்நாட்டின் எதிர்கால சொத்துகளாக இருக்க முடியாது. மாறாக அடுத்த தலைமுறையின் ஒழுக்க கேடுக்கு மெல்ல வளரும் நச்சு வேராகவே அமைய முடியும் என்று பலர் நண்பன் அலுவலகத்திற்கு தொடர்பு கொண்டு தங்கள் ஆதங்கத்தை வெளிப்படுத்தினர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்