பெங்களூரு அடுத்த ஒசகோட்டை அரசு பள்ளியில் படித்து வந்த 3 மாணவர்களை, கடந்த 30ம் தேதி, அதே பகுதியை சேர்ந்த நூருதீன் என்பவர் நண்பர்களுடன் சேர்ந்து அடித்து உதைத்தார். நிர்வாணமாக்கி மாணவர்களை தாக்கியதில், அவர்களுக்கு பலத்த காயம் ஏற்பட்டது. தகவல் அறிந்து சென்ற பெற்றோர் மாணவர்களை மீட்டு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவர்களுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. இதற்கிடையில் பெற்றோர் கொடுத்த புகாரை போலீசார் ஏற்க மறுத்துவிட்டதாக தெரிகிறது. இதனால் குழந்தைகள் நலத்துறை மற்றும் பாலியல் தடுப்பு குழுவை சேர்ந்த அதிகாரிகள் போலீசார் மீது கடும் அதிருப்தி தெரிவித்தனர். மேலும் புகாரை ஏற்க மறுத்த போலீசாரை சஸ்பெண்ட் செய்யவேண்டுமென்று உயரதிகாரிக்கு கோரிக்கை வைத்தனர். நேற்று அவர்களின் கோரிக்கையை ஏற்ற போலீசார் பணியில் அலட்சியமாக இருந்ததாக கூறி, ஒசகோட்டை எஸ்.ஐ தயானந்த், தலைமை காவலர் ராஜூ, ஜெயராம் ஆகியோரை ஊரக எஸ்.பி அமித் சிங் சஸ்பெண்ட் செய்து உத்தரவிட்டார். புகாரை ஏற்பதற்கு ஏன் மறுப்பு தெரிவித்தார்கள் என்பதற்கான உரிய விளக்கம் அளித்த பின்னரே பணியில் சேரவேண்டுமென்று உத்தரவிடப்பட்டுள்ளது.
அதுமட்டுமின்றி, தேசிய அள வில் முதல் 10 இடங்களைப் பிடித்துள்ள
மேலும்தங்களை தேர்வு செய்து சிறப்பித்த கூலாய்
மேலும்ஆசிரியர் தினத்தை முன்னிட்டு கடந்த
மேலும்அண்மையில் இந்தியாவில் தமிழ்நாட்டில்
மேலும்