பெட்டாலிங்ஜெயா, சுற்றுலா, கலாச்சார அமைச்சர் டத்தோஸ்ரீ முகமட் நஸ்ரி அஸிஸ், தன் துணைவியார் ஹப்லின் சைபுலுக்கு தனது அமைச்சு ஒரு பெயர் அட்டையை வழங்கி இருப்பதாக கூறப்படுவதை மறுத்துள்ளார்.இம்மாதிரியான ஒரு பெயர் அட்டையின் புகைப்படம் ஆன்லைனில் வெளியிடப்பட்டு சமூக ஊடகங் களில் வைரலாக பரவி இருக்கிறது. தன் மனைவிக்கு இம்மாதிரியான ஓர் அட்டையை வழங்க தான் எந்த காலத்திலும் அனுமதி வழங்கியது இல்லை என கூறிய நஸ்ரி, புகைப் படத்தில் காணப்படும் அட்டை உண்மையானதா அல்லது போலியானதா என்பதும் தனக்கு தெரியாது என்றார். எனது அமைச்சில் இருந்து வெளியாகும் எந்தவோர் அட்டைக்கும் என்னுடைய அனுமதி தேவை என்றார் அவர். ஹப்லினின் பெயர் இடம் பெற்றுள்ள அந்த அட்டையில் மலேசிய சுற்றுலா, கலாச்சார அமைச்சரின் துணைவியார் என குறிப்பிடப்பட்டு இருக்கிறது. இதை நியூ ஸ்ட்ரெயிட்ஸ் டைம்ஸ் குழுமத்தின் முன்னாள் ஆசிரியர் முஸ்தாபா கமில் நேற்று முகநூலில் பதிவேற்றம் செய்திருந்தனர். இதுபற்றி வினவப்பட்டபோது, இம்மாதிரியான ஒரு பழக்கத்தை நானே பொறுத்துக் கொள்ள மாட்டேன் என்று நஸ்ரி பதிலளித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்