கங்கார், நாட்டை சிறப்பான முறையில் நிர்வகிக்கும் தலைவர்களை மட்டும் மக்கள் தேர்வு செய்ய வேண்டுமே தவிர, தம்மை பிரதமர் வேட்பாளராக பரிந்துரை செய்து வரும் சுயநல விரும்பிகளை அல்ல என்று பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வலியுறுத்தியுள்ளார்.அம்னோவும், தேசிய முன்னணியும் மக்கள் நலனில் அதிக அக்கறைச் செலுத்திவருகிறது. ஆனால், எதிர்க்கட்சியினரோ மக்கள் நலனைப் பொருட்படுத்தாமல் மற்ற விவகாரங்களில் கவனம் செலுத்தி வருகின்றனர். தேர்தல் மூலமாக மட்டுமே ஒரு பிரதமரை தேர்வு செய்ய முடியும். மற்ற எந்த வழிகளிலும் அதற்கு வாய்ப்பே இல்லை, உரிமையும் இல்லை. எதிர்க் கட் சியில் நிலவி வருவதுபோல் நானே பிரதமராக வருவேன் என கூறிக் கொண்டு யாரும் முன்வரமுடியாது. நாடு சுதந்திரம் அடைந்தது முதல் அம்னோ தலைவர் மட்டுமே நாட்டின் பிரதமராக பதவி ஏற்று வந்துள்ளார். காரணம் அம்னோ மட்டுமே நாடாளுமன்றத்தில் அதிகமான இடங்களில் வெற்றி பெறும் என்றும் அவர் கூறினார். பெர்லிஸிலுள்ள 2020 மண்டபத்தில் சுமார் 3 ஆயிரம் அம்னோ உறுப்பினர்கள் மற்றும் தலைவர்களைச் சந்திக்கும் நிகழ்ச்சியில் பிரதமர் இவ்வாறு உரை யாற்றினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்