பார்த்திபன் நாகராஜன் கோலாலம்பூர், இந்திய சமுதாயத்தில் 3 லட்சம் பேர் குடியுரிமை இல்லாததற்கான ஆதாரத்தை ஹிண்ட்ராப் தலைவர் வேதமூர்த்தியும், எதிர்க்கட்சி தலைவர்களும் உட னடியாக வெளியிட முடியுமா என்று மஇகா இளைஞர் பிரிவின் தேசியத் தலைவர் டத்தோ சிவராஜ் நேற்று சவால் விடுத்தார். தேசிய முன்னணியையும், மஇகாவையும் தாக்கி பேசுவதற்கு வேதமூர்த்தி, சுரேந்திரன் உட்பட எதிர்க்கட்சி தலைவர்கள் இந்திய சமுதாயம் எதிர்கொள்ளும் குடியுரிமை பிரச் சினையை தான் ஆயுதமாக பயன்படுத்தி வருகின்றனர். எதற்கெடுத்தாலும் 3 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லை என்று மேடைகளில் பேசி இத்தலைவர்கள் அரசியல் நடத்தி வருகின்றனர். உண்மையிலேயே 3 லட்சம் பேருக்கு குடியுரிமை இல்லையா என்ற கேள்விக்கு விடை தெரிந்து கொள்ளும் வகையில் அரசாங்கத்தின் ஆதரவுடன் மஇகா மெகா மைடஃப்தார் நிகழ்வை நாடு தழுவிய நிலையில் நடத்தியது. 21 இடங்களில் முகாம்களை அமைத்து குடியுரிமை பிரச்சினையை எதிர்கொள்ளும் மக்களை நேரடியாக சந்தித்து அவர்களுக்கு தேவையான உதவிக ளையும் நாங்கள் செய்து வருகிறோம்.இன்று கூட புத்ராஜெயாவில் மெகா மைடஃப்தார் நிகழ்வு நடைபெறுகிறது.இப்படி நாடு தழுவிய நிலையில் நடத்தப் பட்ட மெகா மைடஃப்தார் நிகழ்வில் 2 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் மட்டுமே தங்களின் பிரச்சினைகளை எங்களிடம் நேரடியாக கூறினர் என்று தெரி வித்தார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்