கோலாலம்பூர், டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிமிற்கு எதிரான ஓரின உறவு வழக்கில் அரசு தரப்புக்கு தலைமை வழக்கறிஞராக செயல்பட்ட டான்ஸ்ரீ ஷாபி அப்துல்லா விற்கு 95 லட்சம் வெள்ளியை பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக் வழங்கினார் என்ற குற்றச்சாட்டு கூறப்படுகிறது. இந்தக் குற்றச்சாட்டு மத்தியில் அவ் வழக்கில் அன்வார் குற்றவாளி என்று அளிக்கப்பட்ட தீர்ப்பை தள்ளுபடி செய்யக்கோரி அன்வார் தாக்கல் செய்திருந்த வழக்கு மனுவிற்கு அரசாங்கமும் ஷாபியும் பதில் அளிக்க வேண்டும் என்று நேற்று இங்குள்ள உயர்நீதிமன்றம் அதிரடி உத்தரவை பிறப்பித் துள்ளது. அரசுத் தரப்பு மூத்த வழக்கறிஞர் முகமட் ஷாபி அப்துல்லாவுக்கு பிரதமர் டத்தோஸ்ரீ நஜீப் துன் ரசாக்கின் தனிப்பட்ட வங்கிக் கணக்கிலிருந்து வெ. 95 லட்சம் பரிமாறப்பட்டுள்ளதாகக் கூறப்படுவதையடுத்து அன்வார் மேற்கண்ட வழக்கை பதிவு செய்தார். தம் மீதான வழக்கை நியாயமான முறையில் விசாரிக்கவில்லை என்றும் பிரதமரும் ஷாபியும் வங்கிக் கணக்கு விவரங்களை வெளியிட வேண்டும் எனக் கேட்டும் அன்வார் இரு வழக்குகளை பதிவு செய்துள்ளார். இந்நிலையில் ஆகஸ்ட் 2013க்கும் மார்ச் 2014க்கும் இடைப்பட்ட காலத்தில் மேற்கொள்ளப்பட்ட வங்கி மூலமான பணப் பரிவர்த்தனை விவரங்களை வெளியிடுமாறு அம்னோ தொடர்புடைய வழக்கறிஞர் ஷாபிக்கும் உயர் நீதிமன்றம் ஆணையிட்டுள்ளது என்று வழக்கறிஞர் லத்தீபா கோயா கூறி யுள்ளார். இவ்வழக்கில் அரசாங்கம் அதன் பதிலறிக்கையை ஜூலை 12க்குள் தாக்கல் செய்ய வேண்டும்; ஷாபி ஜூலை 17க்குள் தாக்கல் செய்ய வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார். நீதிபதி கமாலுடின் முகமட் சயிட் முன்பாக நடந்த ஒரு வழக்கு தொடர்பான கலந்தாய்வுக்குப் பிறகு அவர் மேற்கண்ட விவ ரங்களைக் கூறியுள்ளார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்