ஜார்ஜ்டவுன், எந்தவொரு புதிய அரசியல் செயல்பாட்டிலும் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் ஒரு நொண்டி வாத்தாகத்தான் இருப்பார் என்ற கருத்து பரவலாக நிலவிய போதிலும், அவர் சிறையில் இருந்தவாறே எதிர்க்கட்சிக்கு தொடர்ந்து தலைமையேற்க முடியும் என்று பிகேஆர் கட்சியின் முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் ஒருவர் அன்வாருக்கு ஆதரவாக நேற்று குரல் எழுப்பினார். முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் முகமட் தலைமையில் பக்காத்தான் ஹராப்பான் அடுத்த பொதுத் தேர்தலை சந்திக்க வேண்டும் என்ற குரல் எதிர்க்கட்சியினர் மத்தியில் வலுத்து வருவதை பற்றி குறிப்பிட்ட யுஸ்மாடி யூசோப், இந்த கௌரவத்தை அன்வாருக்கு வழங்குவதில் பிகேஆர் தலை மைத்துவம் தொடர்ந்து உறுதியாக இருக்க வேண்டும் என்று வலியுறுத்தினார். அன்வார் தரமிக்க, பயன்மிகுந்த, திறமையான ஒருவர் என்பதால், அவர் சிறையில் இருந்தபோதிலும் எதிர்க்கட்சிக்கு தலைமையேற்கும் தகுதி அன் வாரைவிட வேறு எவருக்கும் கிடையாது என்றும் அவர் வலியுறுத்தினார்.பக்காத்தான் சத்தமாக பிரச்சாரம் செய்ய வேண்டிய தகவல் இது என்று யுஸ் மாடி கூறினார். அடுத்த பொதுத் தேர்தலுக்கான ஏற்பாடுகளை செய்வதில் எதிர்க்கட்சிகளை குழப்பவும் தடுமாற செய்யவும் எதிரிகள் மேற்கொள்ளும் முயற்சிகளால் எதிர்க்கட்சிகள் நொறுங்கி விடுவது துரதிர்ஷ்டவசமானது என்றும் அவர் குறிப்பிட்டார்.சிறையில் அன்வார் தொடர்ந்தாற்போல் வருகையாளர்களை சந் தித்து வருவதால், அவர் கட்சித் தலைவரும் தன் துணைவியாருமான டத்தோஸ்ரீ டாக்டர் வான் அஸிஸா வான் இஸ்மாயில், புதல்வி நூருல் இஸா போன்றவர்கள் மூலம் அவர் கருத்துரைத்தார். அவர் நீதிமன்றத்திற்கு வரும்போது மற்ற தலைவர்களை சந்திக்கிறார். இந்த சிக்கலான உலகமய காலக்கட்டத்தில் நாட்டிற்கு அத்தியாவசியமாக தேவைப்படும் சீர்திருத்தத்தின் அம்சமாக அவர் தொடர்ந்து திகழ்கிறார் என்றார் அவர்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்