பி.ஏ.கந்தையா தெலுக் இந்தான், இங்குள்ள உணவகத்தில் ஆட்டுக்கறியில் மாட்டுக் கறியைக் கலந்து விற்பனை செய்ததாக 1983ஆம் ஆண்டு சட்டத்தின் கீழ் குற்றம் சாட்டப் பட்ட உணவக உரிமையாளரான சுப்பிரமணியம் ராமுலு என்பவருக்கு இங்குள்ள மாஜிஸ்திரேட் நீதிமன்றத்தில் 4,500 வெள்ளி அபராதம் கட்டத் தவறினால் 5 மாதச் சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு கூறப்பட்டது. இத்தீர்ப்பினை மாஜிஸ்திரேட் இந்தான் நூருல் ஃபரேனா பிந்தி ஜைனல் அபிடின் வழங்கினார். குற்றம் சாட்டப்பட்ட சுப்பிர மணியத்தின் சார்பில் பிரபல வழக்கறிஞர் சிவநேசனும் அவருக்கு உதவியாக இளம் வழக்கறிஞர் பிரான்சிஸ் சின்னப்பனும் ஆஜராகினர்.பிராசிகியூஷன் சார்பில் சுகாதார அமைச்சைச் சேர்ந்த குமார குருபரன் ஆஜராகியிருந்தார். குற்றம் சாட் டப்பட்ட சுப்பிர மணியம் இங்குள்ள பண்டார் பாருவில் செயல்பட்டு வந்த அவரின் ஹைதரா பாத் கறி ஹவுஸ்சில் கடந்த 2015ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 9ஆம் தேதி தம்முடைய உணவகத்தில் ஆட்டுக்கறியில் மாட்டுக்கறியைக் கலந்து விற்பனை செய்ததாகக் குற்றம் சாட்டப்பட்டது. சுப் பிரமணியம் குற்றச்சாட்டை மறுத்து விசாரணை கோரியிருந்தார். இவ்வழக்கில் சுப்பிரமணியம் குற்றவாளி என்று பிராசிகியூஷன் தரப்பு போதிய ஆதாரப்பூர்வ சாட்சியங்களுடன் நிரூபித்துள்ளதால் இவருக்கு 4,500 வெள்ளி அபராதம் விதிப்பதாகவும் கட்டத் தவறினால் ஐந்து மாத சிறைத்தண்டனை விதிப்பதாகவும் மாஜிஸ்திரேட் இந்தான் நூருல் ஃபரேனா பிந்தி ஜைனல் அபிடின் வழங்கினார். இந்த வழக்கினை ஈப்போ உயர்நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்யவிருப்பதாக குறிப்பிட்ட வழக்கறிஞர் சிவநேசன், மலேசிய இந்திய உணவ கங்களுக்கு எதிராக செய்யாத குற்றத்திற்கு இன்று தண்டனை வழங்கப்பட்டுள்ளது.இதனைக் கருப்பு தினமாக அனுசரிக்க வேண்டும். எந்த வொரு உண்மையான இந்துவும் மாட்டுக்கறியைக் கையால் கூட தொடமாட்டார்கள். அப்படிப்பட்ட இந்து ஒருவ ருக்கு எதிராக இந்தத் தண்டனை வழங்கப்பட்டுள்ளது. இவருடன் சேர்த்து தெலுக் இந்தான் நகரில் ஜாலான்பண்டார் வெண் ணிலா விலாஸ் உணவகம் பாபா நாசி கண்டார் ஜாலான் மங்கிஸ் பாறு விலாஸ் உணவகம் ஆகிய உணவக உரிமை யாளர்களுக்கு எதிராகவும் இதே போன்று வழக்கு தொடுக்குப்பட்டுள்ளது. இவர்களுக்கு எதிரான வழக்கு விசாரணை பிறகு ஒரு நாளில் நடைபெறும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்