- திலகா, வழக்கறிஞர், நீலாய் கோலாலம்பூர், சமீபத்தில் நம் நாட்டில் தொடர்ந்து இடைவிடாது ஏற்படுத்தப்பட்ட சமுதாய அவலங்கள் எண்ணில் அடங்கா. ஒரு சிறுமியின் சித்ரவதை, 3 வயது சிறு வனுக்கு போதைப் பொருள் கொடுத்தல், இரண்டாம் படிவ மாணவன் பள்ளியில் உயிர்க்கொல்லி மருந்துடன் வலம் வந்து அருந்தியது, பின் நவீனின் மரணம். சட்டங்களும் அரசியல் வாதிகளின் திட்டங்களும் இந்த அவலங்களை துப்புரவு செய்ய முடியுமா அல்லது குறைந்த பட்சம் தவிர்க்கவோ அல்லது குறைக்க முடியுமா? நிச்சயமாக முடியாது. நம் சமுதாயத்தில் புரை யோடி கிடக்கும் இப்பிரச்சினைகளை சட்டத்தாலும் திட்டத் தாலும் முழுமையாக சிகிச்சை செய்ய முடியாது. இதற்கு காரணம் பல உண்டு. சட்டங்களும் திட்டங்களும் மாணவர்களிடையே பெரிய விழிப்புணர்வை ஏற் படுத்தவில்லை. மாணவர்களும் இந்த சட்டங்களுக்கும் திட்டங்களுக்கும் அடிபணிவதில்லை. இதற்கு காரணம் மாணவர்களின் மரபணுவில் வழி வழியாக விதைக்கப்பட்ட விருட்ச விதைகளே காரணம். அப்பன் திருந்தா விடில் சுப்பன் திருந்த வாய்ப்பில்லை, அதுவும் சுப்பன் சுயமாக திருந்தாவிடில் சட்டத்தாலும் திட்டத்தா லும் ஒன்றும் செய்ய இயலாது. உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி ஒரு மனிதனின் வாழ்வியல் அடைவு நிலையை நான்காக பிரிக் கலாம். அவை உடல் நலம், ஆத்ம நலம், அறிவு நலம், மற்றும் ஒழுக்க நலம். இந்த நான்கு கூற்றுதான் ஒரு மனிதனின் அன்றாட வாழ்வியல் தரத்தை நிர்ணயிக்கிறது. அம்மனிதன் மாணவனாக இருந்தாலும் சரி மற்றவர் களாக இருந்தாலும் சரி ஒவ்வொரு மனிதனின் செயலும் நடவடிக்கையும் இந்த நான்கு தூண்களுக்குள் அடங் கும். ஆத்ம நலம் இல்லாத பட்சத் தில் அறிவு நலமும் ஒழுக்கமும் சரிவர இல்லாத எந்த மனிதனும் மேற்குறிப் பிட்ட அவலங்களை செய்ய அதிக வாய்ப்புண்டு. மனம் வெறுப்புற்று ஆத்ம நலம் இல்லாத மனிதன் பிற உயிர்களுக்கும் மற்றும் தன் உயிருக்கும் ஊறு விளைவித்து கொள்வான். பாதிக்கப்பட்ட மனம், அரவணைக்க படாத உறவு, புறக்கணிக்கப்பட்ட உறவு, தோல்விகளால் துவண்ட மனம், வாய்ப்புகளே இல்லாமல் பரிதவிக்கும் சமு தாயம், இவர்களுக்கு ஒரு வகை வெறுப்பும் மனப்பாதிப்பும் உண் டாகும். இது போன்ற சூழ்நிலையில் உருவான மாணவர்கள் தன் அறியாமையில் சிறு சிறு கேளிக்கைகளுக்காக மது அருந்துவது, போதைப் பொருளுக்கு அடிமையாவது, பகடி வதை செய்வது, குண்டரி யலில் ஈடுபடுவது மற்றும் வன் முறையில் கூட்டாக ஈடுபடுவது. இம்மாதிரி பிரச்சினைகளை மனோ தத்துவ ரீதியில் அணுக வேண்டும் அல்லது ஜீவகாருண்ய ஒழுக்க ரீதியில் அணுக வேண்டும். ஒரு பெரும் கூட் டத்தை கூட்டி வலியுறுத்த முடியாது. ஒவ்வொரு தனி நபரையும் ஒரு மன நோயாளியாக பாவித்து, உள்கூற்றை ஆராய்ந்து பின்னர் தான் திருத்த முடியும். மன நலம் பாதிக்கப்பட்ட இவர்களால் தத்தம் குடும்பத்தினர்க்கும் , சமுதாயத்திற்கும் ஏன் நம் நாட்டிற்கே பெரிய அவமானமும் இகழ்வும் ஏற் படுகிறது. இந்த அடாத செயல்கள் அறியாமையால் மட்டும் உண்டாகவில்லை . மாறாக பிற உயிர்களை தன் உயிர்போல் கருதாத சுயநல போக்காலும் இக்கொடும் செயல்கள் உண்டாகின்றன. அரிக்கன் விளக்கில் விழுந்து அழியும் விட்டில் பூச்சி போல , மனம் நலம் பாதிக்கப்பட்ட மாணவர்கள் , முளையிலே கருகி வாழ்வை பாழ்படுத்தி கொள்கின்றனர். மாணவர்கள் வன்முறையில் ஈடுபடும்போது , சட்டபிடியில் சிக்கி தங்கள் எதிர்கால வாழ்வை அழித்து கொள்கிறார்கள். ஒரு முறை சிறைத் தண்ட னையை அனுபவித்தால் அது பதிவாகி வாழ்நாள் முழுவதும் நிழல் போல் தொடர்ந்து அம்மாணவனின் முன்னேற்றத்தை தடுக்கும். நல்ல தொழிலிலும் ,சமுதாயத்தில் நற்பெயரையும் சம்பாதிக்க முடியாது . இதனால் வாழ்க்கையே நிர்மூலமாகிவிடும் . இச்செயல்களுக்கு யார் காரணம் என்று குறிப்பிட்ட ஒரு நபரை கூற முடியாது. இருப்பினும் சமுதாயத்தில் உள்ள அனைவரும் இதற்கு பொறுப்பேற்க வேண்டும். பெற்றோர்களும் மற்றவர்களும் அவர் அவர் பொறுப்பை சரிவர செய்திருந்தால் மனித நேயமும் ஜீவகாருண்யமும் ஓங்கி இருக்கும், மாணவர்களும் மற்றவர்களும் வன்முறையில் ஈடுபட மனசாட்சி தடையாக இருந்து இருக்கும். ஆகவே, சட்டங்களும் திட்டங்களும் வன்முறையில் ஈடுபடும் மாணவர்களை சென்றடைய வேண்டும். மாண வர்கள் மனம் திருந்த வேண்டும். புத் தகங் களில் இருக்கும் சட்டங்களும் மேடையில் முழங்கும் திட்டங்களும் தனிப்பட்ட மாணவன் மனதில் மாறுதல் ஏற்படுத்த வேண்டும். இல்லாவிடில் இரைத்த நீர் நெல்லுக்கு செல்லாமல் பயனற்று போகும். மாணவர்களிடையே மன வளர்ச்சியும் மறுமலர்ச்சியும் ஏற்பட வேண்டும் என்றால் அரசு திட்டங்களும் செயலாக்க திட்டங்களும் நேரடியாக பள்ளி மாணவர்களை சென்றடைய வேண்டும். இன்றைய சூழ்நிலையில் நமது நாட்டில் மேற்கூறிய குற்றங்களுக் காக அரசாங்கம் பல கடுமையான சட்டங் களை இயற்றி உள்ளது. அவை சி.பி.சி., சொஸ்மோ 2012, இ.ஓ., போக்கா 2002 போன்றவை. இந்த சட்டங் களில் ஒரு முறை குற்றம் நிரூபிக்கப்பட்டால் மீண்டும் சரியான வாழ்க்கை நிலைக்கு திரும்ப இயலாது. ஆகவே மாணவர்களுக்கு தன்னடக்கமும் நன்னடத்தையும் இன்றியமையாததாகும். மேற்கூறிய விளக்கங்க ளும்,கருத்துக்களும் காஜாங் கூட்டமைப்பு சிறார் சிறைச்சாலைக்கு சென்று பார்த்தால் உள்ளங்கை நெல் லிக்கனியாக விளங்கும்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்