ஜார்ஜ்டவுன், டி.நவீனின் கொலைக் குற்றச்சாட்டில் சிக்கியுள்ள, பதின்ம வயதைச் சேர்ந்த நால்வரின் குடும்பத்தினரும் வெளியில் நடமாட முடியாத அளவிற்கு பெருத்த அவமானத்தை எதிர்நோக்கியுள்ளனர். இதனை அக்குடும்பத்தைச் சார்ந்தவர்களே வெளிப்படையாக ஒப்புக்கொண்டுள்ளனர். தெ மலேசியன் இன் சைட் எனும் இணையத்தள ஏடு இதுபற்றி கூறுகையில், நவீன் வன்புணர்ச்சிக்கு ஆளாக்கப்பட்டதாக கூறப்படுகிறது. ஆனால், இது நிரூபிக்கப் பட வில்லை என்று அந்த நால்வரில் ஒருவரின் தந்தை கூறியதாகத் தெரிவித்தது. இப்படி ஒரு மகனை பெற்றதற்காக தன்னை ஒரு விலைமாது என்று சிலர் முத்திரைக் குத்திவிட்டதாக அவரின் மனைவி சொன்னார். சிலர் என் மகனை கொல்லப்போவதாக மிரட்டுகின்றனர். என் மகன் படத்தையும், மற்றவர்கள் படத்தையும் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வருகின்றனர். இது கொடு மையாக இருக்கிறது. சமூக வலைத்தளத்தில் இது பற்றி கொடூரமாக வர்ணிக்கப்பட்டுள்ளதால் என்னால் வேலைக்குக் கூட செல்ல முடியவில்லை. மற்றவர்கள் இச்சம்பவம் நிகழ்ந்ததிலிருந்து தங்கள் பிள்ளைகளை பள்ளிக்கு அனுப்புவதை நிறுத்தி விட்டனர். அந்த அளவிற்கு குத்தலான பேச்சும், பார்வையும் எங்களால் தாங் கிக்கொள்ள முடியவில்லை என்றார் அவர். இதற்கிடையே, தாங்கள் பல வழக்கறிஞர்களை நாடியதாகவும், ஆனால் எவரும் வழக்கை எடுத்து நடத்த முன்வரவில்லை என்றும் சம்பந்தப்பட்ட இளை ஞர்களின் உறவினர் ஒருவர் கூறினார். போலீஸ் புகாரிலும், இது சம்பந்தமான அறிக்கைகளிலும் வன்புணர்ச்சி என்ற வார்த்தை பயன்படுத்தப்பட் டிருப்பதால் வழக்கறிஞர்கள் வழக்கை எடுக்க மறுத்து வருகின்றனர் என்றும் அந்த உறவினர் தெரிவித்தார். நவீன் வன்புணர்ச்சிக்கு ஆளாகியிருப்பதை மருத்துவர்கள் உறுதிப்படுத்தியுள்ளனர். நேற்று முன் தினம் அந்த நால்வரும் நீதிமன்றம் கொண்டுவரப்பட்டபோது அவர்களில் ஒருவனான எஸ்.கோகுலன் (18) தன் குடும்பத்தாரை கண்டதும் வாய் விட்டு அழுதான். இதனை கண்ணுற்ற அவனது சகோதரர் தனது கை சைகையின் வழி அமைதியாக இருக்கும்படி அவனை கேட்டுக்கொண்டார். பக டிவதை செய்யப்பட்டு, கடுமையாக தாக்கப்பட்ட நவீன் நினைவு திரும்பாத நிலையில் கடந்த ஜூன் 15-ஆம் தேதி பினாங்கு மருத்துவமனையில் மரண மடைந்தான்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்