கோலாலம்பூர், ஓய்வு பெற்ற இந்திய அரசாங்கப் பணியாளர்கள் எதிர்கொள்ளும் பிரச்சினைகளை மலேசிய நண்பன் தொடர்ந்து முன்னெடுக்கும் என்று அதன் நிர்வாக இயக்குநர் டத்தோ ஷாபி ஜமான் நேற்று கூறினார்.மலேசிய ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க பணியாளர்கள் சங்கத்தின் ஆண்டுக் கூட்டம் நேற்று முன் தினம் தலைநகரில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்து கொண்டு டத்தோ ஷாபி சிறப்புரையாற்றினார்.ஓய்வு பெற்ற இந்திய அரசாங்க பணியாளர்களை ஒன் றிணைக்கும் நோக்கில் இச் சங்கம் உருவாக்கப்பட்டுள்ளது.இச்சங்கத்தை உருவாக்கிய டாக்டர் அந்தோணி உட்பட அனைத்து நிர்வாக குழுவினருக்கும் வாழ்த்துகளை தெரிவித்துக் கொள்கிறேன். ஓய்வு பெற்றபின் அரசாங்க பணியாளர்கள் பல பிரச்சினை களை எதிர்நோக்குகின்றனர் என்று அதன் தலைவர் அந்தோணி தமது உரையில் கூறினார். இப்பணியாளர்கள் எதிர்கொள் ளும் பிரச்சினைகளுக்கு உரிய தீர்வு கிடைக்கும் வரை அது குறித்து செய்திகளை வெளியிட மலேசிய நண்பன் நாளிதழ் தயாராக உள்ளது. அதே வேளையில் இச்சங்கத்தின் முயற்சிகளுக்கும் மலேசிய நண்பன் துணையாக இருக்கும் என்றும் டத்தோ ஷாபி ஜமான் செய்தி யாளர்களிடம் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்