சென்னை: தமிழக சட்டமன்றத்திலிருந்து எதிர்கட்சியான தி.மு.க வெளிநடப்பு செய்துள்ளது. அ.தி.மு.க உறுப்பினர் ஓ.எஸ்.மணியனின் நேற்றைய பேச்சை அவைக் குறிப்பிலிருந்து நீக்குமாறு தி.மு.க உறுப்பினர்கள் கோரினர். அவை துவங்கியதும் இக்கோரிக்கை குறித்து எதிர்கட்சி துணைத் தலைவர் துரைமுருகன் கேள்வி எழுப்பினார், இக்கேள்விக்கு சபாநாயகர் பதில் சொல்லாததால் தி.மு.க உறுப்பினர்கள் ஸ்டாலின் தலைமையில் வெளிநடப்பு செய்தனர். காங்கிரஸ், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் உறுப்பினர்களும் வெளிநடப்பு செய்தனர். வெளிநடப்பிற்கு பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ஸ்டாலின், சபாநாயகர் தனபால் சர்வாதிகார அடிப்படையில் செயல்படுவதாக குற்றம்சாட்டினார். அவை முன்னவர் பதில் சொல்லி முடித்த பிரச்சனையை ஓ.எஸ்.மணியன் பேசியதை தான் தி.மு.க உறுப்பினர்கள் எதிர்த்ததாக குறிப்பிட்டார். நீதிமன்றத்தில் இருக்கும் பிரச்சனையை மணியன் பேசினார். நாங்களும் பெங்களூரில் நடைபெற்ற சொத்துக் குவிப்பு வழக்கு பற்றி பேசலாமா என வினவினோம். ஆனால் சபாயாகர் எங்களது பேச்சை மட்டும் அவைக் குறிப்பிலிருந்து நீக்க உத்தரவிட்டதாக ஸ்டாலின் புகார் கூறினார்.
தேசிய இலக்கவியல் இணைப்பு திட்டத்தின் கீழ் மலேசிய தொடர்புத்துறை மற்றும்
மேலும்மை டிஜிட்டல் என்று சுருக்கமாக அழைக்கப்படும் செயல் திட்டங்களில் இத்தகைய
மேலும்கல்விக்கடனை எளிதாக திருப்பி செலுத்தும் வண்ணம் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்உயர்கல்வி அமைச்சின் கீழ் ஓர் ஏஜென்சியாக விளங்கி வரும் பி.டி.பி.டி.என். என்ற
மேலும்